இராஜராஜ சோழனும் கடல்வழித் திறமையும்


இராஜராஜனின் ஒரு மெய்க்கீர்த்தி இவ்வாறு கூறுகிறது:

ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்

இதன் மூலம் இராஜராஜனின் போர்த்திறன் வெளிப்படுகிறது. காந்தளூர் என்னும் துறைமுகத்தில் சேரர்களின் (பாஸ்கர் ரவி வர்மன் திருவடி) கப்பல்களை அழித்ததாகக் குறிப்பிடும் இவ்வரிகளிலிருந்து, சோழ கப்பற்படை நன்கே இருந்தது எனக் கொள்ள்லாம். அதே போல ஸ்ரீலங்காவின் மீது 993(கி.பி)-ஆம் ஆண்டில் படையெடுத்து அதன் வடபுறத்தினைக் கைப்பற்றி அந்த இடத்திற்கு ‘மும்முடி சோழ மண்டலம்’ எனப் பெயரிட்டதும், இராஜராஜனின் கடற்படைத் திறனைக் காட்டுகிறது. தனது ஆட்சிக் காலத்திலேயே ஸ்ரீலங்கவை முழுவதுமாக வென்று, பின்னர் வெங்கி நாட்டையும் தனதாக்கிக் கொண்டு அதைச் சக்திவர்மனுக்கு ஆட்சி புரிய அளித்தான். கடற்படையில் சிறந்திருந்த போதும், இராஜராஜன், அப்படையை எந்நாட்டையும் அழிக்கப் பயன்படுத்தவில்லை.
சைலேந்திரர்களுடன் அவனது உறவு குறிப்பிடப்படவேண்டியது. ஏனெனில் சரித்திரரீதியாக நாம் அறிந்து கொள்வதெல்லாம் சைலேந்திரர்கள் குறிப்புகள் மூலமே! சுமத்ராவிலும் இன்றைய மலேசியாவிலுமிருந்து தான் நமக்கு அதிகமான சான்றுகள் கிடைக்கின்றன. அவற்றிலிருந்தே, அதாவது, அவை அங்கு கிடைப்பதிலிருந்தே, இராஜராஜனின் பெருமை அறியப்படலாம். அங்கு கிடைக்கும் பல சான்றுகளினின்றும் சைலேந்திர நாட்டு சூளாமணிவர்மன் அவனது மகனான விஜயோத்துங்கவர்மன் (1003-1005) ஆட்சியிலும் இராஜராஜனின் உறவு அந்நாட்டினுடன் மிக நன்றாகவே இருந்திருக்கிற தென்பதைத் தெரிந்து கொள்கிறோம். ராஜேந்திரன் காலத்தில் தான் கடற்படை ஆக்ரமிப்புக்குப் பயன் படுத்தப்பட்டது. இராஜராஜனின் கப்பல்கள் மாலத்தீவுக்குச் சென்று அங்கு 10,000 தீவுகளைக் கைப்பற்றியதாகவும் தெரிகிறது.
அதே போல சீன நாட்டிலிருந்தும் பல சான்றுகள் நமக்குக் கிடைத்துள்ளன.
இப்போது அதற்கான சான்றுகள் ஒன்றும் இல்லையெனினும், நாகபட்டினம்தான் சோழர்களின் முக்கியமான துறைமுகமாக இருந்தது. அப்போதைய சோழ நாட்டு மாலுமிகள் கடல்வழிப் பயணத்தை நன்கே அறிந்து வைத்திருந்தனர். ஆருத்ரா தரிசனம் முடிந்தவுடன்தான் அவர்களது கடல்வழிப் பயணம் ஆரம்பமாகும். தை மாத ஆரம்பத்தில் வடக்கிலிருந்து வங்காள விரிகுடாவில் கடல் நீரில் தெற்கு நோக்கி ஓட்டம் இருக்கும் அதைப் பயன்படுத்திக் கொண்டு, (அந்த நீரோட்டத்திற்கு வடக்கன் என்று பெயர்) கப்பல்கள் வெகு சுலபமாகத் தெற்கு நோக்கிப் பயணிக்கும். (ஆகையால் தான் ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற பழமொழி உண்டானதாக நான் நம்புகிறேன்.) அப்படிச் செல்லும் கப்பல்கள் ஸ்ரீலங்காவின் கிழக்குக் கரையிலுள்ள அக்கரைபட்டினம் என்ற ஊரை அடையும். அப்போது காற்று கிழக்கு நோக்கி வீசும். அதைப் பயன்படுத்திக் கொண்டு கப்பல்கள் கிழக்குத் தீவுகளை அடையும். இதை நன்கு அறிந்திருந்தவர்கள் இராஜராஜ சோழன் காலத்து மாலுமிகள். இராஜேந்திரன் இந்தத் திறமையை சீர் செய்து இன்னும் கப்பல்கள் செல்வதைப் பெருக்கினான். ஆனால் அவ்வழிகளை அமைத்துக் கொடுத்தது இராஜராஜன்தான். அதற்கு முன்னர் கலிங்கர்களும், குஜராத்தியர்களும் அறிந்திருந்தனர்! இருந்தாலும் அதை முறையாகப் பயன்படுத்தியது இராஜராஜன்தான் என்றால் மிகையாகாது!
தவிரவும் இராஜராஜன் காலத்தில்தான், வணிகக் குழுக்கள் கீழை நாடுகளுக்குச் சென்று தமது வணிகக் கூடங்களை நிறுவியது. அப்போது தான், பல நாடுகளினின்று வந்த வணிகர்களும்கூடி வணிகத்தை முழுமையாக பன்னாட்டு நிறுவனமாக மாற்றினர். ஆகையால், வணிகத்தை நாடு கடந்து சிறப்பாக நடப்பதற்கு வழிவகுத்துக் கொடுத்ததில் இராஜராஜனின் பங்கு அதிகம் இருந்தது எனக் கொள்ளலாம்.
முக்கியமாக, நாடு கடந்து அச்சமின்றி வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு நம் வணிகர்கள் தமது வணிகத்தை நிலைநிறுத்தினது மட்டுமன்றி, அரசு மாறினாலும் அதனால் அவர்களுக்கு ஒருவிதக் குறையுமின்றி வணிகம் நடத்துவதற்கு உண்டான உபாயங்களையும் செய்து கொடுத்த மன்னன் இராஜராஜன் என்று கூறலாம்!

நன்றி :மாய தேவர் ...

hanks to http://www.tamilhindu.com/2010/08/rajaraja-cholans-power-in-sea-route-power/

கரிகாலன்----காரவேலன்-----மௌரியர் படையெடுப்பு

கரிகாலனின் சிறப்பை நாம் முழுமையாக அறிவதற்குக் கலிங்கத்தை ஆண்ட காரவேலனின் கல்வெட்டு நமக்கு உதவுகிறது.காரவேலன்(கி.மு 176-163) என்பவன் கலிங்கத்தை 13 ஆண்டுகள் ஆண்டவன்.அவன் 11 ஆம் ஆட்சியாண்டில்(அதாவது கி.மு.165 இல்) தமிழகத்தை வென்றுள்ளான்.


மூவேந்தர் கூட்டணி
அவனின் அத்திகும்பா கல்வெட்டில்" இன்றைக்கு 113 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியத் "திரமிள சங்காத்தம்"(தமிழர் கூட்டணியை) உடைத்தேன் என்று குறிப்பு உள்ளது.இதனைப் பொருநராற்றுப்படையாலும் உணரலாம்.

முடத்தாமக்கண்ணியார் பாடிய பொருநராற்றுப்படையில்

"முரசுமுழங்கு தானை மூவரும் கூடி
அரசவை இருந்த தோற்றம் போல"

என மூவேந்தரும் கூடியிருந்த காட்சி பேசப்படுகிறது.எனவே கரிகாலன் அவையில் இக்கூட்டணி உருவானது என்று உணரலாம்.


கலிங்கநாட்டிற்கு மேற்கே வடுகர் நாட்டைத் தமிழர்கள் ஆண்டுள்ளனர்.113 ஆண்டுகள் கூட்டணியாக இருந்து தமிழர்கள் வடபுலம்வரை ஆண்டதால் கலிங்கர்களால் தமிழர்களை வெல்லமுடியவில்லை.பின்னாளில் இந்தப் பகுதியை இரேணாட்டுச் சோழர்கள் ஆண்டனர்.

மௌரியர் படையெடுப்பு
கி.மு.278 இல் வடக்கிலிருந்து ஒரு படையெடுப்புத் தமிழகத்தின் மேல் நடக்கிறது(கி.மு.300 இல் மௌரியர் படையெடுப்பு நடந்துள்ளதையும் இங்குக் கவனிக்க வேண்டும். சந்திரகுப்த மௌரியன் எடுத்த மோவூர் படையெடுப்பு இதுவாகும்)கி.மு.278 இல் சந்திரகுப்த மௌரியரின் மகன் பிந்துசாரன் என்பவன் படையெடுத்தபொழுது தமிழர்கள் ஒன்றுகூடி எதிர்த்தனர்.வடக்கே 16 அரசர்களை எதிர்த்து, பாடலிபுத்திரம் திரும்பினான்.சந்திரகுப்தன் படையெடுப்பு வடுகர் நாட்டின் வழியாக நடந்தபொழுது வடுகர்களும் படையுடன் சேர்ந்து தமிழகம் வந்தனர். இவர்களுக்குப் பாடம் கற்பிக்க வடுகர்நாட்டை வென்று 113 ஆண்டுகள் தமிழர் கூட்டணி ஆண்டது.இவ்வாறு தமிழர் கூட்டணியான திரமிள சங்கார்த்தம் உருவாக அடிப்படைக் காரணமாக விளங்கியவன் கரிகாலனே ஆவான்(கி.மு.278).இவன்தான் கூட்டணிக்கு முதன்மை தந்திருக்க வேண்டும்.ஏனெனில் வடநாட்டுப் படையெடுப்பால் முதலில் பாதிக்கப்படுவது சோழநாடே ஆகும்.எனவே சோழ அரசன் கரிகாலன் தலைமையில் படை அமைக்கப்பட்டிருக் கலாம்.

நன்றி :http://muelangovan.blogspot.com/2010/04/blog-post_14.html

குறிப்பிட்ட அண்மையாய்வாளர் Shashi Kant என்பார், ஜெய்சுவால் - பானர்சியில் இருந்து முற்றிலும் வேறுபட்டு, இக்கல்வெட்டின் உள்வரும் காலக் குறிப்புகள் எல்லாம் மகாவீரரின் இறப்பின் பின்வந்த முற்றாண்டுகளையே குறிக்கின்றன என்று நிறுவி, ”திராமிர சங்காத்தம்” என்பது ம.பி. [மகாவீரருக்குப் பின்] 113 ஆம் ஆண்டில் ஏற்பட்டது என்று வரையறுப்பார். அதாவது திராமிர சங்காத்தம் ஏற்பட்டது (கி.மு.527-113=) கி.மு.414 என்பார் .

தமிழகத்தை அடுத்திருந்த மொழிபெயர்தேயம் மூவேந்தர் காவலுக்குட்பட்டதாக மாமூலனாரின் அகநானூறு 31-ஆம் பாட்டில் வரும் ”தமிழ்கெழுமூவர் காக்கும் மொழிபெயர்த் தேஎத்த பல்மலை” என்ற சொற்றொடரால் உணருகிறோம். மாமூலனார் காலம் மோரியருக்குச் சற்று பின்பட்டது. மாமூலனார் சொல்வது போல், [வடபுலத்தார் படை தென்புலத்துள் நுழையா வண்ணமும், தென்புலத்துச் சாத்துக்கள் தயக்கமின்றி தக்கணப்பாதையின் வழியாக மகதம் வரை போய்வரும் வண்ணமும்,] ஓர் ஒன்றிணைந்த காவலைத் தமிழ்மூவேந்தர் மொழிபெயர் தேயத்தில் ஏற்படுத்தியிருப்பார்களேயானால், மூவேந்தரிடையே ஏதோவோர் அரசியல் உடன்பாடும் புரிதலும் இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

இந்தத் ”திராமிர சங்காத்தத்தின்” கூறுகளாய் மூன்று கருத்துக்களை நாம் உன்னித்துக் கருதலாம்.

1. மூவேந்தரும் தம்முள் எவ்வேளிரையும், அடக்கலாம்; ஆனால் அவரிடம் இறைபெற்ற பின், தனியாட்சிக்கு விட்டுவிடவேண்டும். அவர் கொடிவழியை அழிக்கக் கூடாது. [வேளிருக்கும் வேந்தருக்கும் இடையே கொள்வினை, கொடுப்பினைகள் காலகாலமாய் உண்டு.]
2. தமிழகத்திற்கு வெளியிருந்து மூவேந்தர் / வேளிர் மேல் யாரேனும் படையெடுத்தால், தமிழகம் காக்க மூவரும், தங்களுக்குள் என்ன மாறுபட்டாலும், அதைப் பொருட்படுத்தாது, ஒருவருக்கொருவர் உதவ வேண்டும்;
3. தமிழகத்தில் இருந்து தக்கணப்பாதைவழி வடக்கே போய்வரும் சாத்துக்களைக் காப்பாற்றும் வகையில், மொழிபெயர் தேயத்தில் மூவேந்தர் நிலைப்படைகள் (standing armies) நிறுத்திச் செயற்பட வேண்டும். [நிலைப்படையை மாமூலனார் பாடல்கள் குறிப்பாக சொல்லுகின்றன.]

இந்தத் ”திராமிர சங்காத்தத்தின்” கூறுகளாய் மூன்று கருத்துக்களை நாம் உன்னித்துக் கருதலாம்.


நன்றி: http://valavu.blogspot.com/2010/05/6_14.html....

சிலப்பதிகாரத்தில் சோழ, பாண்டியர் நிலை:

இனிச் சோழநாட்டு நிலைக்கு வருவோம். சிலம்பிற்குச் சற்று முன்பு சோழநாடு இரண்டானது சிலம்பிலேயே வெளிப்படுகிறது.

வள நாட்டுச் சோழன் (உறையூர்ச் சோழன்) ஒரு கிள்ளி/வளவன். இவன் செங்குட்டுவனின் மாமன் மகன். உறையூர் அரசு கட்டிலில் அவனை ஏற்றியவனும் செங்குட்டுவனே.

நாகநாட்டுச் சோழன் (புகார்ச்சோழன்) ஒரு செம்பியன்; செங்குட்டுவனை மதியாதவன். [நாக நாடு என்பது சிலம்புக் காலத்தில் புகாரைச் சுற்றிய சிறு நாடு. இதுவும் சோழநாடு தான். நாக நாட்டை சரியாக அடையாளம் காணாது அதனைப் ”பாதாள உலகம்” என்று புரிந்துகொண்டவர் பலர். நாக நாடு என்பது ஒருபக்கம் புகாருக்கு அருகிலும், இன்னொரு பக்கம் யாழ்ப்பாணத்திலும் விரிந்தது போலும் (26). நாகனார் தீவான நயினாத் தீவு, மணிபல்லவம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டது. புகாருக்கே, நாகரோடு தொடர்புடைய சம்பாதி என்ற பெயரும் உண்டு. தவிர அதே நாட்டுள் நாக(ர்)பட்டினம் என்ற இன்னொரு துறைமுகமும் உண்டு.]

நாகநாடும், வளநாடும், நாடுகாண் காதை (40-43) வரிகளின் படிச் சிறு நாடுகளாவே இருந்திருக்கின்றன. காடுகாண் காதையில் வரும் வரிகளை (27A) ஆய்ந்து பார்த்தால் இந்த நாடுகளின் நீட்சியை ஓரளவு அறியலாம். புகார் நகரிலிருந்து காவிரியை ஒட்டினாற் போல் நாகநாட்டின் எல்லை வெறும் 50-60 கி.மீ மட்டுமே இருந்தது என்று நம்பமுடிகிறாதா? அண்மை ஆய்வின் முடிவில் இவ்வுண்மை அறிந்து நானும் வியப்பில் ஆழ்ந்தேன் (27B) இதே போல, வளநாட்டின் கிழக்கெல்லை திருவரங்கத்திற்கு அருகிலே முடிந்து விடுகிறது. நாகநாட்டின் வடக்கெல்லை தென்பெண்ணையாற்றில் இருந்திருக்கலாம். வளநாட்டின் வடக்கெல்லை தெரியவில்லை. வளநாட்டின் மேற்கெல்லை உறையூருக்கும், கொங்குக் கருவூருக்கும் இடைப்பட்டது. பொதுவாக, வளநாடும், நாகநாடும் சிலம்பின் காலத்தில் சிறு நாடுகள். வளநாட்டிற்கும் நாகநாட்டிற்கும் இடைத்தொலைவு காவிரியை ஒட்டி பாண்டியனிடமே இருந்திருக்கிறது. இது மாங்காட்டு மறையவன் கூற்றால் விளங்குகிறது (28).)

பாண்டியன் நெடுஞ்செழியனும், அவன் தம்பி வெற்றிவேற் செழியனும் கூட செங்குட்டுவன் மேலாளுமையை ஏற்காதவர். [”இளங்கோ வேந்தன் துளங்கொளி ஆரம்” என்ற கொலைக்களக் காதை 163 வரிகளின் பின் செழியன்மகன் பற்றிக் குறிப்பு வருகிறது. மதுரை எரியுண்டதில் செழியன் மகன் இறந்ததால், கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன், நெடுஞ்செழியனின் தம்பியாய் இருக்கவே வாய்ப்பு அதிகம்.]

thanks : http://valavu.blogspot.com/2010/05/6_14.html


...

தஞ்சைப் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா

ராஜராஜ சோழன் ஆட்சியில் அமர்ந்த 19-வது ஆண்டில் தஞ்சை பெருவுடையார் ஆலயத்தைக் கட்டத் தொடங்கி 25வது ஆண்டின் 275-வது நாளில் கட்டி முடிக்கப்பட்டது (கி.பி. 1010) என்று வரலாறு கூறுகிறது. கிரானைட் கற்கள் இல்லாத இடத்தில் இவ்வளவு பெரிய ஆலயத்தை அமைத்தது ஒரு வியப்பு என்றாலும், இதன் கலைத்திறனும், வடிவமைப்பும், காலம் கடந்து நிற்கின்றன. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாகவும் தஞ்சைப் பெரிய கோயில் அறியப்பட்டிருக்கிறது. இக் கோயில் தற்போது இந்தியத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டு 1000 ஆண்டுகள் நிறைவடைகின்றன என்பது பற்றியும், இக் கோயிலின் பெருமை குறித்தும் அனைத்துப் பத்திரிகைகளும், ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. ஆனாலும், இந்தக் கோயிலின் ஆயிரமாவது ஆண்டுவிழாவை நடத்த வேண்டும் என்கிற எண்ணம்கூட ஏன் மத்திய அரசுக்கு ஏற்படவில்லை? தஞ்சைப் பெரிய கோயில் வெறும் தமிழர் பெருமை மட்டும்தானா? இந்தியப் பெருமை இல்லையா! (தாஜ்மஹாலுக்கு 500-வது ஆண்டு என்றால் சும்மா இருக்குமா இந்திய அரசு?)தற்போது வெளியாகியுள்ள நிகழ்ச்சிநிரலைப் பார்க்கும்போது, ஆட்டம், கொண்டாட்டம் என்பதாகவும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கமும் கோயில் வளாகத்தில் பொது அரங்கமும் நடத்தி, முதல்வரின் பொதுக்கூட்டத்துடன் முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது. இது போதாது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த ஒரு கலைச் சின்னத்தின் பெருமையை இரு நாள் விழாவில் அடைத்துவிடக் கூடாது. இலங்கையிலும் இந்தோனேஷியாவிலும் ராஜராஜ சோழன் நிறுவிய கடல் கடந்த வெற்றிகள் என அந்தப் பேரரசனின் புகழை மீட்டெடுக்கும் வகையில் இந்த விழா ஒரு தொடர்ச்சியான திட்டத்தைக் கொண்டு அமைய வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் என்றால் மட்டுமே தமிழர் பெருமையை உலகம் அறியும். அதற்கான வாய்ப்பும் நேரமும் இதுதான்.ராஜராஜ சோழன் தனது அரசை பல பகுதிகளாகப் பிரித்து, நிர்வாகிகளை நியமித்து, சரியான கண்காணிப்பு மற்றும் வரிவசூல் முறைகளை ஏற்படுத்திய அரசன். கிராமங்களில்கூட தேர்தல் நடத்தி நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் மக்களாட்சி முறைகண்ட சோழன். வேளாண் சாகுபடியை விரிவுபடுத்த ஊக்கப்படுத்தியும், அதன் நடுவே கோயிலையும், அந்தணர் குடியிருப்புகளுக்கு நிலம் வழங்கி அவர்களைக் குடியேற்றியும் கோயில், கல்வி ஆகியவற்றின் தொடர்பு அற்றுப்போகாமல் பார்த்துக்கொண்ட அரசன் ராஜராஜன்.ஐம்பொன் சிலைகள் மிக அழகாக, சரியான அளவுகளுடன் படைக்கப்பட்ட காலம் ராஜராஜ சோழன் காலத்தில்தான். இன்னும்கூட அந்தக் கோயிலின் பெருமையை முழுமையாகப் பார்த்துத் தெரிந்து கொண்டவர்கள் இல்லை. பிரகதீஸ்வரர் என்ற பெயர் பின்னாளில் ஏற்பட்டது. பெருவுடையார் கோயில் என்பதுதான் ராஜராஜன் சூட்டிய பெயர் என்பதுகூடப் பலருக்குத் தெரியாத நிலைமைதான் உள்ளது. "பழமை பழமை என்று பாவனை பேசலன்றிப் பழமை இருந்த நிலை-கிளியே, பாமரர் ஏதறிவார்' என்பதுதான் உண்மைநிலை.எல்லோரையும் கோயிலின் உள்புறத்தில் செல்ல விடுவதில்லை. இருப்பினும்,கோயிலின் கருவறையின் உள்புறத்தில் உள்ள சுவர் ஓவியங்களைப் பற்றி இந்தியத் தொல்லியல் துறையும் உலக வல்லுநர்களும் புகழ்கிறார்கள். ஆனால் அந்த அற்புத ஓவியங்களைப் பார்த்த தமிழர்கள் எத்தனை பேர்? அந்தச் சுவர் ஓவியங்களை வண்ணத் தாளில் அச்சடித்துப் புத்தகமாகக் குறைந்தவிலையில் விநியோகிக்க வேண்டாமா? இணையதளத்தின்மூலம், இந்தியாவின், தமிழனின் பாரம்பரியப் பெருமையை உலகறியச் செய்ய வேண்டாமா?இக் கோயிலின் ஒவ்வொரு பகுதியையும் விவரிக்கும் ஓர் ஆவணப் படத்தைத் தமிழக அரசு தயாரித்து, அவற்றை குறுவட்டுகளாக வெளியிட்டால் தமிழர் அனைவருமே இக் கோயிலின் பெருமையை உணர ஏதுவாக அமையும்.108 கர்ணங்களில் (நாட்டிய அடவுகள்) தஞ்சைப் பெரிய கோயிலின் கருவறைக்கு மேல்தளத்தில் உள்ள புறச்சுவரில் 81 கர்ணங்கள் உள்ளன. மீதமுள்ள 27 கர்ணங்களுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் சிலைகள் முழுமையாக்கப்படவில்லை, ஏன் என்கிற கேள்வி, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஆய்வரங்களில் சு. சிற்பி திருநாவுக்கரசு, பு. கார்த்திகா இருவராலும் எழுப்பப்பட்டது. இதற்கான ஆய்வுகள் வேறு உண்மைகளைத் திறக்க உதவக்கூடும்.தஞ்சைப் பெரிய கோயிலின் கோபுர விமானத்தில் 81 டன் எடைகொண்ட ஒரே கல்லை எப்படி ஏற்றி வைத்தார்கள் என்பது இன்றும்கூட விவாதிக்கப்படும் கட்டடக்கலை நுட்பமாகப் பேசப்படுகிறது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பேசிய டாக்டர் எஸ். காமேஸ்வரன், பிரமிடுகளின் உச்சியில் உள்ள கடைசிக் கல்லின் எடையும் மிக அதிகம். அதைச் சாதிக்கக் காரணமாக இருந்தது தமிழர் கலைநுட்பமாக இருக்கலாம் என்று, வரலாற்று ஆசிரியர் நீலகண்ட சாஸ்திரிகளை மேற்கோள் காட்டினார். இதைப் பற்றிய ஆய்வுகளை ஊக்குவிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ராஜராஜ சோழன் குறித்தும், அன்றைய சோழர் கால நிலைமை குறித்தும் விளக்கும் நல்ல நாவல், அரசுடைமையாக்கப்பட்ட நாவல், அமரர் கல்கியின் "பொன்னியின் செல்வன்'. இந்த நாவலின் சுவை குன்றாமல் சுருக்கி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழ்த் துணைப்பாட நூலாக அறிவித்தால், தமிழகத்தில் அனைத்துக் குழந்தைகளும் ராஜராஜ சோழன் பற்றி அறிந்து கொள்ள உதவும். சோழர் ஆட்சியின் கலை, நிர்வாகத் திறன், வெற்றிகளைத் தமிழர் அறிய விழையும் ஒரு தூண்டுகோலாக இந்த விழா அமையட்டும்!

thanks to   http://www.dinamani.com ....

இராசராச சோழன் கள்ளரே..ஆதாரங்கள் வருமாறு

முன்னுரை:
குற்றப்பரம்பரை சட்டம் கொண்டுவருவதற்குமுன்பாக,

பிரிட்டிசுப் பேரரசு, சுமார் 150 ஆண்டுகளுக்குமுன், டொணமூர் & சோல்பரி என்ற 2 ஆணையர்களைநியமித்து, கள்ளர்களின் வரலாற்றை ஆய்வுசெய்துள்ளது.அவ்வாய்வறிக்கையில், கள்ளர்களை வியப்பில் ஆழ்த்தும் பல வரலாற்றுச் செய்திகள் உள்ளன.

விசயாலயச் சோழன் மனைவி, வலங்கைமான் ஆவூருக்கு அருகிலுள்ள ஊத்துக்காடு மழவராயர் மகள். மேலும் தஞ்சை பெரியகோயிலைக்கட்டிய இராசராச சோழன்,

கல்லணையைக்கட்டிய கரிகாலன்,

மகனின் மீது தேராட்டி பசுவுக்குநீதிவழங்கிய ஆரூர் மனுநீதிச்சோழன் அனைவரும் கள்ளர்களே!உலகிலேயே 2000 க்கும் மேற்பட்ட பட்டப்பெயர்கள் உள்ள ஒரே இனம் கள்ளர் இனம் மட்டுமே!!! இவ்வாறு அவ்வாய்வறிக்கை முடிவுகள் கூறுகின்றன.இராசராசோழனை பள்ளர், பறையர்,புலையர்,வலையர் என்றெல்லாம் இழிவுபடுத்துவதை தடுக்க நம் இனத்தினர் நீதிமன்றம் செல்லவேண்டிய அவசியமிருக்கிறது என்றே எண்ணுகின்றேன். ஏனெனில், நான் ஊத்துக்காடு மழவராயர் குடும்பத்தில் பிறந்தவன். இன்றைக்கும் ஊத்துக்காட்டில் 5 குடியானதெருக்கள் முழுவதும் வீரசிங்கநாட்டுகள்ளர் என்பவர்கள் மட்டுமே வசித்துவருகின்றோம். மேலும், சோழ மன்னர்கள் அனைவரும் வீர இனத்தினரான கள்ளர்குலத்தைச்சேர்ந்தவர்கள். எனவே, அவர்களைப்பற்றி எழுதவேண்டிய அவசியமும் அத்தியாவசியமும் எனக்கு ஏற்பட்டுள்ளதால், கட்டுரைகளை தொடங்குகின்றேன்.

பிற்காலச்சோழர்களின் ஆட்சிப்பட்டியல்:

கள்வன் ராஜ ராஜன்” என்றும், “களப ராஜராஜன்” என்றும் தன்னுடைய மெய்க்கீர்த்திக் கல்வெட்டில் பொறித்து வைத்துள்ள இராஜராஜ சோழன் – கள்ளரே! ஆவார்.


இரண்டாம் இராசராச சோழன் கிபி.1146ல் அரியணை ஏறினார். அவருடைய மூன்றாம் ஆட்சியாண்டில் கிபி.1149ல் இரண்டு மெய்க்கீர்த்திக்கல்வெட்டுக்களை வெளியிட்டார். அக்கல்வெட்டு-1ல் தன்னை “களப ராஜராஜன்” என்றும், மற்றொரு 2-வது கல்வெட்டில், தன்னை ”கள்வன் ராஜ ராஜன்” என்றும் பொறித்துவைத்துள்ளார். 860 ஆண்டுகளுக்குமுன் வெட்டப்பட்டுள்ள “களப” என்ற வார்த்தை “களவ” என்பதன் திரிபு ஆகும். களவர், களபர் என்ற பட்டப்பெயர் உள்ள கள்ளர்கள் இன்றும் தஞ்சாவூரிலும், அதனைச்சுற்றியுள்ள ஊர்களிலும் வசித்து வருகின்றனர்.(ஆதாரம்: ந.மு.வேங்கடசாமி நாட்டாரய்யா அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரம் & சர்வதச கள்ளர்பேரவை வெளியிட்டுள்ள பட்டப்பெயர்கள் பட்டியல்.
ஆரியர்கள் இமயம் கடந்து இந்தியாவிற்குள் வந்த காலம் கி.மு.1500. அவர்கள் வடநாடெங்கும் பரவியதை ஆரிய வர்த்தனம் என்று வரலாறு குறிப்பிடுகிறது. ஆரியவர்த்தனம் நடைபெற்றபிறகு, அவர்கள் வாழ்வியல்தேடி தெற்கே விந்தியமலை கடந்து தமிழகத்திற்குள் நுழைந்தகாலம் கி.மு.6ம் நூற்றாண்டு ஆகும். கி.மு.6ஆம் நூற்றாண்டுக்குமுன், அதாவது ஆரியர்கள் தமிழகம் வருவதற்குமுன், தமிழகத்தில் சாதிப்பிரிவுகள் ஏதும் இல்லை. திருமணக்கலப்பு ஏதும் தடைசெய்யப்படவில்லை குறிஞ்சி நிலத்து குறவன் ஒருவன் முல்லைநிலத்து இடைச்சியை மணக்கலாம். அதுபோல் நெய்தல் நிலத்து பரதவன், மருதநிலத்து விவசாயப்பெண்ணைமணக்கலாம்.(ஆதாரம்:முனைவர் கே.கே.பிள்ளை அவர்கள் எழுதிய தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்)அப்போது, தமிழகத்தில் மக்கள் அவரவர் செய்துவந்த தொழிலுக்கேற்ப பல குலங்கள் மட்டுமே தோன்றியிருந்தன. தமிழக மக்கள் அனைவரும் அவரவர் செய்துவந்த தொழிலின் அடிப்படையில், தொழில் பெயராலேயே அழைக்கப்பட்டனர். எ.கா:—(1)அளவர் (2)இடையர் (3)உமணர் (4)உழவர் (5)எயினர் (6)குயவர் (7)கூத்தர் (8)கொல்லர் (9)தச்சர் (10)தட்டார் (11)தேர்ப்பாகர் (12)பரதவர் (13)பறையர் (14)புலையர் (15)வண்ணார் (16)வணியர் (17) வெள்ளாளர் (18)களவர். இன்றைய கள்ளர்குல முன்னோர்கள் அனைவரும் உலகம் தோன்றிய நாள்முதல் போர்க்களம் சென்று போராடுவதையே தங்கள் குலத்தொழிலாகக்கொண்டிருந்தனர் என்பதை பன்னிருபடலம், புறப்பொருள்வெண்பாமாலை, அகநானூறு, புறநானூறு, நற்றிணை கலித்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற தமிழ இலக்கியங்கள் மூலம் அறியமுடிகிறது.


களவர்(விளக்கம்): ஆதிகாலம் முதல் நம்குலமுன்னோர்கள் அனைவரும்போர்க்களத்தொழிலையே குலத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்ததால், கி.மு.ஆறாம் நூற்றாண்டுக்குமுன் அக்குலத்தொழில் பெயராலேயே களவர் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டனர். களவர் என்றால் களம் காண்பவர் என்று பொருள். இதனைப்பற்றி, மயிலை சீனி வெங்கடசாமி அவர்கள் எழுதியுள்ளது வருமாறு: களவர் தமிழ்ச்சொல். களம் என்னும் தமிழ்ச்சொல்லிலிருந்து பெறப்படும். களம் என்றால் போர்க்களம். களவர் என்பதற்கு களம் காண்பவர் அல்லது போர்க்களம் சார்ந்த மக்கள் என்று பொருள். இவ்வாறு அவர் எழுதியுள்ளார். தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்ற நூல் எழுதிய எட்கர் தர்சன் என்ற ஆங்கிலேய வரலாற்று ஆசிரியரும் கள்ளர்,மறவர், அகமுடையோர் என்போர் போர்க்களம் சார்ந்த மக்கள் என்பதை தெளிவாக எழுதியுள்ளார். பிற்காலத்தில், களவர் என்ற வார்த்தைக்கு புள்ளி வைத்து எழுதும்போது கள்வர் என்றும்,கள்வர் என்ற வார்த்தையே தற்காலத்தில் கள்ளர் என்றும் மரூவி வந்துள்ளது. தஞ்சை பெருவுடையார் கோயிலில் உள்ள மாமன்னர் இராஜராஜசோழனின்கல்வெட்டில் “தாய்மண் காக்க உதிரம் கொட்டிய கள்ளர்குல மறவர்களுக்கு உதிரப்பற்று என்னும் வரிநீக்கிய நிலங்களை கொடையாக அளித்து போற்றியுள்ளது” பொறித்துவைக்கப்பட்டுள்ளது. இதை அறியாத அரைவேக்காட்டு கத்துக்குட்டி வரலாற்று ஆசிரியர்கள், கள்ளர் என்பதற்கு திருடர் என்று பொருள் கண்டுள்ளனர்., மேலும், கள்ளர்கள் பலப்பல போர்க்களங்கள் கண்டு ஏராளமான விருதுப்பெயர்களை சோழமன்னர்களிடமிருந்து பெற்றுள்ளனர் என்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளன. எனவே, கள்ளர்களைவிருதுகள் பலகூறு வீரைமுடையான் என்று மிராஸ்ரைட் கல்வெட்டு கூறுவதை காண்க:

“தொண்டைமண்டல வரிசை மூவாறு குடிமக்கள் சுருதிநாள் முதலாகவே துங்கமிகு நாவிதன், குயவன்,வண்ணான், ஓலை சொன்னபடி எழுதும் ஒச்சன், கண்டகம் மாளர்வகை ஐவர், வாணியர் மூவர், கந்தமலர் மாலைகாரர் கலைமீது சரடோட்டும் பாணன், தலைக்கடைக் காவல்புரி பள்ளி,வலையன், பண்டுமுதல் ஊரான் மறிக்கும் இடையன், விருது பலகூறு வீரமுடையான் பதினெண் குடிமக்கள் அனைவரும்……………………………………”

பழங்காலத்தில், போர்முரசு கொட்டியவுடன், நம் முன்னோர்கள் அனைத்துவேலைகளையும் புறம்தள்ளிவைத்துவிட்டு, அவசரம் அவசரமாக போர்க்கோலம் பூண்டு, இடது தோளில் வில்லை எடுத்துமாட்டிக்கொண்டு, வலது தோளில் முதுகுப்பக்கம் கற்றை கற்றையாக எண்ணற்ற அம்புகளைப்பிணைத்திருக்கும் அம்பறாத்தூளியை எடுத்துக்கட்டிக்கொண்டு, இடது இடையில் போர்வாளுடன கூடிய உறையை எடுத்து இறுகக்கட்டிக்கொண்டு, வலதுகையில் நெடிய ஈட்டியையும் இடதுகையில் கேடயத்தையும் எடுத்துக்கொண்டு போர்க்களம் நோக்கி ஓடி, எதிரி நாட்டுப்போர்ப்படையின்மீது புலிபோல் பாய்ந்து உயிரைப்பற்றிக்கவலைப்படாமல் மதம்கொண்ட யானையைப்போல்வெறியுடன் போர்க்களம்முழுவரும் ஓடி எதிரிகளின் தலைகளை பனங்குலைகளை வெட்டித்தள்ளுவதைக்போல் வெட்டித்தள்ளி வீரம்-தீரம் காட்டிப்போராடியவர்கள் என்பதை புறநானூறு அகநானூறு போன்ற தமிழ் இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் தொல்காப்பியர். அவர் நம்குலமறவர்களாகிய வெட்சிமறவர் கள்வர்கள் போர்செய்த முறையையும் அவர்கள் போர்க்களம் சென்று வீரமரணம் அடைந்தபின் நடுகல்லாகி அனைவராலும் வணங்கப்பட்ட செய்திகள் பலவற்றையும் நேரில் கண்ட செய்திகளாக பன்னிருபடலத்தில் நமக்கு படம்பிடித்துக்காட்டுகிறார். தொல்காப்பியருக்குப்பின் இருநூறு ஆண்டுகளுக்குப்பின் வாழ்ந்தவர் திருவள்ளுவர்.அவரும் நம்மறக்குடி மக்களின் மாண்பையும் வீரத்தையும் நேரில்கண்டு போற்றிப்பாடியுள்ளார். திருவள்ளுவரின் கீழ்காணும் இருபாடல்கள் நம் குல முன்னோர்கள் போர்க்களத்தில் நின்று போராடும் காட்சியை நமக்குக் காட்டுகின்றது:“விழித்தக்கண் வேல்கொண்டு எறிய, அழித்து இமைப்பின் ஓட்டு அன்றோ வன் கணவர்க்கு”(குறள் 775)பொருள்: போர்க்களத்தில் நேருக்குநேர்நின்று போர்புரியும்போது, எதிரி எறியும் வேலைக்கண்டு, திறந்திருந்த கண்களை சிறிது மூடிதிறந்தாலும்(இமைத்தாலும்) அது கோழையின் செயலாகக்கருதி, புறமுதுகிட்டு ஓடியதற்கு ஒப்பாகும்.“கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும்” (குறள் 774பொருள்:போர்க்களத்தில் வீரன் ஒருவன் தன்னைத்தாக்க எதிரேவரும் யானையின் மீது தன் கையிலிருக்கும் கூரிய வேலை வேகமாக எறிந்து அதன் உடலில் ஆழமாக பாய்ச்சி விடுகின்றான். வேலின் வன்மையை தாக்குபிடிக்கமுடியாத அந்த யானை வலியினால் பின்வாங்கி அவன் எறிந்த வேலோடு திரும்பி ஓடிவிடுகின்றது. மேற்கொண்டு போராட வேலில்லையே என அவ்வீரன் செய்வதறியாது திகைத்து நிற்கின்றான். அப்போது, எதிரி எறிந்த வேல் ஒன்று வேகமாக பாய்ந்துவந்து அவன் மார்பில் பதிந்த நிற்கின்றது. அதுகண்டு அவன் மனம் மகிழ்ந்தான். வேல்ஒன்று கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில், அவன் மார்பில் தைத்துநிற்கின்ற அந்த வேலை பிடிங்கி கையில் எடுத்து சுழற்றிக்கொண்டு எதிரியைத்தாக்க மகிழ்ச்சியுட்ன் ஓடுகின்றான்.

மேலும், போர்க்களம்செல்லும் முன் தன் மனைவியை மைத்துனர் வீட்டில் விட்டுச்செல்வதையும் நம் குலமுன்னோர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். போர்க்களம் செல்லும் நம்குல மறவர்கள், மாலையில்வீடுதிரும்புவோம் என்ற நிச்சயமற்றநிலையை மனதில் கருதியே அவ்வழக்கத்தைக்கடைபிடித்தனர்.தமிழ் இனத்தில்பள்ளுபறை என்னும் 18 சாதிகள் உண்டு. ஆனால், எந்த சாதியினரும் செய்யாத மிகவும் ஆபத்தான தொழிலையேஇவர்கள் செய்ததற்குக் காரணம், முற்கால மன்னர்கள் இவர்களை மிகவும் போற்றி மதித்துள்ளனர் என்பதுமட்டுமல்லாமல் பிறந்த மண்ணுக்காகவும், மன்னனுக்காகவும் போரில் வீர மரணம் அடைவதை பெறும் பேறாகக்கருதியவர்கள் நம்குலமுன்னோர்கள் என்பதும் அவர்கள் உண்மையாக போர்செய்து வெற்றிவாகைசூடி மன்னனுக்குபெருமைதேடித்தந்தனர் என்பதையே தஞ்சை பெருவுடையார் கோயிலில்உள்ள பேரரசன் இராஜராஜ சோழனின்கல்வெட்டு சான்று கூறுகிறது. போர்க்களம் சென்ற தன் தளபதிகள் உடல் உறுப்புக்கள் ஊனமின்றி நல்லபடியாக வீடுதிரும்பவேண்டும் என, சிவபெருமானைவேண்டி இராஜராஜசோழன் திருவிளக்கு எரிய நிவந்தம் விட்ட செய்திகளும்தஞ்சை பெருவுடையார்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம்.இரட்டைப்பாடி ஏழரைஇலக்கத்தின்மன்னன் மேலைச் சாளுக்கியனுடன் 100 ஆண்டுகளுக்குமேல் நடைபெற்ற போரில் 9,00,000 போர்வீரர்கள் போரிட்டுஇறுதியில் சோழமன்னன் வெற்றிவாகை சூடினான்..தரைப்படை,குதிரைப்படை,யானைப்படை மற்றும்கப்பற்படைமூலம் கடல்கடந்த நாடுகளையும் தாக்கி தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் சோழர்படை வென்றது.

1. பாண்டிநாடு

2. பல்லவநாடு

3. சேரநாடு

4. இலங்கை

5. இரட்டைப்பாடி ஏழரை இலக்கம்

6. வேங்கி

7. சாளுக்கியநாடு

8. சக்கரக்கோட்டம்

9. கலிங்கம்

10. கங்கபாடி

11. நுளம்பப்பாடி

12. குடகு

13. கேரளம்

14. கொல்லம்

15. மாநக்கவாரம்

16. மாப்பாளம்

17. மலேயா தீபகற்பத்திலுள்ள மாயிருடிங்கம்

18. கடாரம்

19. சாவகம்

20. இலாமுரிதேசம்

21. சிறீவிசயம்

22. கருமனம்

23. புட்பகம்

24. யவனம்

25. மிசிரம்

26. காழகம்27. புட்பகம்

28. அரபிக்கடலிலுள்ள முன்னீர் பழந்தீவுபன்னீராயிரம்

29. அங்கம்

30. வங்கம்

31. கோசலம்

32. விதேகம்

33. கூர்சரம்

34. பாஞ்சாலம்

35. இடைதுறைநாடு

36. வனவாசி

37. கொள்ளிப்பாக்கை

38. மண்ணைக்கடக்கம்

39. மதுரமண்டலம்

40. நாமணக்கோணை

41. பஞ்சப்பள்ளி

42. மாசுணிதேசம்

43. ஒரிசா(ஒட்ட விசயம்)

44. சுமத்ரா தீவிலுள்ள விசையம்

45. பண்ணை

46. மலையூர்

47. இலங்கா சோகம்

48. இலிம்பிங்கம்

49. வளைப்பந்தூறு

50. தக்கோலம்

51. மதமாலிங்கம்

ஆகிய நாடுகளை சோழர் படைவென்றுஉலகப்பேரரசாக மாறியது. சோழனின் படை வடஇந்தியாவில் உள்ள கங்கைக்கரைவரை சென்று வெற்றிவாகைசூடியது.வடஇந்தியாவின்மீது 18முறை படையெடுத்து சோமநாதபுரம் கோயிலை கொள்ளையிட்ட ஆப்கானிஸ்தானின்துருக்கி அரசன் கஜினிமுகமதுவை தண்டிக்கவும் இராஜேந்திரசோழன் வடஇந்தியாவின்மீது திக்விஜயம் செய்தார்என்பதற்கு வலுவான வரலாற்று சான்று உள்ளன. கி.பி.1025,டிசம்பர் மாதத்தில் 17வது முறையாக கஜினி முகமதுசோமநாதபுரம் கோயிலின்மீது படையெடுத்தான். அவன் அக்கோயிலைநோக்கி அரபிக்குதிரைகளின்மீதும்ஒட்டகங்களின்மீதும் புயல்காற்றென வாயுவேகத்தில் வந்து தாக்கினான். அவனைத்தடுத்த 50,000க்கும் மேற்பட்டநிராயுதபாணியான பக்தர்களைவெட்டிசாய்த்தான். கோயிலை இடித்து, இறைவனுக்கு காணிக்கையாக பக்தர்களால்அளிக்கப்பட்ட தங்கம்,வைரம், வைடூரியம், கோமேதகம்,முத்து, பவளம்,மாணிக்கம் போன்ற விலையுயர்ந்த கோடானகோடிசெல்வங்களை கொள்ளையிட்டு ஒட்டகங்களின்மீதும், குதிரைகளின்மீதும் மூட்டையாக்க்கட்டிஅள்ளிச்சென்றான். அவன் அப்போது கொண்டுபோன தங்கம் மட்டுமே ஆறுடன் எடைக்கு குறையாது. அம்மூட்டைகளைதூக்கமுடியாமல், ஒட்டகங்களும், குதிரைகளும் முதுகைநெளித்துக்கொண்டு எறும்புஊருவதைபோல்ஆப்கானிஸ்தானை நோக்கி மெல்ல ஊர்ந்துசென்றன.. இவ்வாறு அரபுநாட்டு வரலாற்று ஆசிரியர்அல்காசுவினி எழுதியுள்ளார். கி.பி.1000லிருந்து தொடங்கி தொடர்ந்து ஆண்டுதோறும் துருக்கி அரசன் கஜினிமுகம்மதுவடஇந்தியாவின்மீது படையெடுத்து சோமநாதபுரம் சிவன்கோயிலைகொள்ளைஅடித்துவரும்செய்தி, சிவபாதசேகரனும்சிவநேசச்செல்வனுமான இராஜராஜசோழனையும், மும்முடிச்சோழன் பெற்ற களிறு என்று வரலாறு போற்றும்இராசேந்திர சோழனையும் மனம் நோகச்செய்திருக்கவேண்டும். மேலும், கஜினி முகமது கிபி.1018ல் கன்னோசிநாட்டின்மீதுபடையெடுத்து, அந்நாட்டை ஆண்ட ராஜ்யபாலனைத்தோற்கடித்து நாட்டைவிட்டே துரத்தி, வழக்கம்போல்கோயில்களை இடித்தும், கோயில் சொத்துக்களையும் உடைமைகளையும் சூறையாடி, பொதுமக்களைகொன்றுகுவித்து ஊருக்கும் எரியூட்டி அந்நாட்டிற்கு பேரிழப்பை உண்டுபண்ணினான். ராஜ்யபாலன் இவற்றைத்தடுக்கஎவ்வித முயற்யசியும்செய்யாது கோழையைப்போல் ஓடி ஒளிந்துகொண்டான். இதனால் பக்கத்து நாட்டுமன்னர்கள்சந்தெல்லர் நாட்டு மன்னன் வித்தியாதரன் என்பவன் தலைமையில் ஒன்றுகூடி நடவடிக்கை மேற்கொண்டனர்.கஜினியை எதிர்த்துப்போரிடாத கோழை ராஜ்யபாலனை கொன்று அவன் மகன் திரிலோசன பாலனை கன்னோசியின்மன்னாக முடிசூட்டி, கஜினியை எதிர்க்க கூட்டு உடன்படிக்கை மேற்கொண்டனர். தன்னைஎதிர்த்து கூட்டுநடவடிக்கைமேற்கொண்ட மன்னர்களைத்தண்டிக்க, கஜினி மீண்டும் கன்னோசியின்மீது படையெடுத்து வெற்றிகண்டான். இரண்டுஆண்டுகளுக்குப்பிறகு,(கிபி.1021-22ல்) தனக்கு எதிராக கூட்டணிநிறுவிதலைமையேற்ற வித்தியாதரனைத்தண்டிக்க,கஜினி முகமது அவன் நாட்டின்மீது படையெடுத்தான்.இந்நிலையில்,வடநாட்டுபடையெடுப்பின்போது போசராசன்நட்பும், சேதிநாட்டுக்காளச்சூரி மன்னன் காங்கேயர் விக்கிரமாதித்தன் நட்பும் இராசேந்திர சோழனுக்கு கிடைத்தது.அவர்களின் வேண்டுகோளை ஏற்று,வித்தியாதரனை கஜினியிடமிருந்து காப்பாற்ற மாபெரும் படையுடன் இராசேந்திரசோழன் வடநாடுநோக்கி திக்விஜயம் புறப்பட்டான். வழியில் சக்கரக்கோட்டம், மதுரை மண்டலம், நாமனைக்கோட்டம்,பஞ்சப்பள்ளி, மாசுணிதேசம்(சிந்துநதிக்கரையில் உள்ளது) ஆகிய இடங்களை கைப்பற்றினான்.(ஆதாரம்: டாக்டர்கே.கே.பிள்ளை அவர்கள் எழுதிய தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும் பக்கம் 277&278ல்காண்க).இராசேந்திரசோழனின் மேற்கண்ட திக்விஜயத்தைகேள்விபட்ட கஜினி முகமது அஞ்சிஓடிஒளிந்துகொண்டான். அதுமட்டுமல்ல.,இராசேந்திரசோழனின் மேற்கண்ட வடநாட்டு படையெடுப்பிற்குப்பிறகு,இந்தியாவின்மீது படையெடுப்பதையும் கோயில்களை கொள்ளை யடிப்பதையும் விட்டுவிட்டான். அதன்பிறகுஇந்தியாவின் மீது படையெடுப்பு எதையும் கஜினி முகமது எடுக்கவில்லை எ ன்று வரலாறுகூறுகிறது.மதுரை மண்டலம் என்பது யமுனைக்கரையில் உள்ள வடமதுரையே என்பதில் ஐயமில்லை.அந்நகர் அக்காலத்தில் செல்வமும் செழிப்பும் புகழும்பொதிந்து காணப்பட்டதால், அந்நகர்மீது கஜினிமுகமது பன்முறை தாக்குதல்நடத்தி கொள்ளையடித்து தீயிட்டு சீரழித்தான்.அப்போது வடநாட்டு மன்னர்களின் வேண்டுகோளைஏற்று சிவபாதசேகரனின் மகனான இராசேந்திரசோழன்,சோமநாதபுரம் கோயிலைக் காப்பாற்றவும்,கஜினிமுகம்மதுவுடன் போரிட்டு அவன்தொல்லையிலிருந்து வடஇந்தியாவைவைக் காப்பாற்றவும், மாபெருமபடை திரட்டிக்கொண்டு வடநாட்டின்மீது திக்விஜயம் விஜயம் மேற்கொண்டான் என்று கருதத்தோன்றுகிறது என்று டாக்டர் கே.கே.பிள்ளை கூறுகிறார்.(பக்கம்279) இராஜேந்திரசோழனின் நாட்டம் அடுத்துக் கங்கை வெளி யின் மீது பாய்ந்த்து. மேலைச்சாளுக்கிய மன்னன்இரண்டாம் சயசிம்மனுக்கு படைத்துணைநல்கிய வர்களான கலிங்கத்து அரசனும், ஒட்டவிசயஅரசனும் சோழர்படைக்கு அடிபணிந்தனர். இப்படைகள் மேலும் வடக்கே முன்னேறிச்சென்று இந்திரதரன், இரணசூரன், தருமபாலன்ஆகியமன்னர்களை வென்று கங்கைவெளியில் அடிவைத்தன. வங்க நாட்டு பாலவமிசத்து மன்னன் மகிபாலன் என்பான்சோழர்படைக்கு தலைவணங்கி அடிபணிந்தான். கங்கைஆற்யறைக்கடந்துசென்றும் சோழர் படை சிற்சில இடங்களில்போரிட்டுவென்றது. வங்காளம் முழுவதுமே சோழப்பேர்ரசின் மேலாட்சிக்குஇணங்கிற்று.இராசேந்திரசோழனின் வடநாட்டுபடையெடுப்பில் படைத்தலைவனாக சென்ற கருநாடகக்குறுநிலமன்னன் ஒருவன் மேலை வங்கத்தில் குடியேறினான்.அவன் வழியில் பிறந்த சமந்தசேனன் என்ற ஒருவன் தோன்றி, “சேனர் பரம்பரை” ஒன்றை மேற்கு வங்காளத்தில் தொடங்கி வைத்தான். மேலும், இராசேந்திரசோழன் கங்கைக்கரையிலிருந்து சைவர்கள்(கங்கை வேளாளர்) சிலரை கொண்டுவந்து காஞ்சிபுரத்தில் குடியேற்றினான்(ஆதாரம்: திரிலோசன சிவாச்சாரியார் எழுதிய சித்தாந்த சாராவளி என்னும் நூல்).கங்கைத்திருநாட்டில் வேளாண்மைத்தொழில் செய்த வேளாளர் இன்றும்தமிழகத்தில், தங்களை கங்கைக்குலத்தவர் என்றே கூறிக்கொள்கின்றனர். வேளாளர்களுக்குக் கங்கக்குலம் அல்லது கங்க வம்சம் என்ற பெயரும் உண்டு. ஏனெனில் அவர்கள் பிளினி, டாலமி ஆகியவர்களால் குறிப்பிடப்பட்ட கங்கைத்தீரத்திலுள்ள வல்லமைவாய்ந்த கங்கரிடே என்ற மாபெருங்குடி மரபிலிருந்து தங்கள் குலமரபை வரன்முறையாகக் கொண்டனர். (ஆதாரம்:ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் தமிழகம் ஊரும் பேரும் என்ற நூலில் எழுதியுள்ளது).இராசேந்திரன் கிபி.1018ல் இலங்கை முழுவதையும் வென்று சோழப்பேரரசின்கீழ் கொண்டுவந்தார். முதலாம் பராந்தகச்சோழனிடம் தோற்றோடிய வீரபாண்டியன் அன்று சிங்களத்தில் கைவிட்டோடிய பாண்டிநாட்டு மணிமுடியையும், இந்திரஆரத்தையும், இரெத்தின சிம்மாசனத்தையும், பாண்டியனின் செங்கோலையும் இராசேந்திரன் மீட்டு வந்தார்.(”தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மாப்பினவே” என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் இதனை குறிப்பிடுவதை காண்க) மேலும் சிங்கள மன்னனின் மணிமுடியையும் அவன் பட்டத்தரசியின் மணிமுடியையும் பறித்தார். இலங்கையில் சிவனுக்கும் பெருமாளுக்கும் பல கோயில்கள் எழுப்பப்பட்டன. சேரனும் தன்அரசுரிமையையும், செங்கதிர் வீசிய மணிமாலை ஒன்றையும் இராசேந்திரனிடம் பறிகொடுத்தான். இராசேந்திரன் மதுரையில் தன் மகனைப் பிரதிநிதியாக அமர்த்தி, அப்பிரதிநிதியிடம் பாண்டிநாடு, கேரளம் ஆகியவற்றின் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தான்.(கிபி.1018-19) அப்பிரதிநிதியின் பெயர் சடாவர்மன் சுந்தரபாண்டியன். இவன் 23 ஆண்டுகள் அரசாண்டான். வடநாட்டு வெற்றிகளுக்குப்பிறகு நாடுதிரும்பிய இராசேந்திரன் சோழகங்கை என்னும் குளம் ஒன்றை வெட்டி அதில்கங்கையிலிருந்து கொண்டுவந்தநீரைசொரிந்து கங்கா ஜலமயம் ஜயஸ்தம்பம் என்று பெயரிட்டுத் தன் வெற்றிக்கு விழாகொண்டாடினான். தன்மருமகன் இராசராச நரேந்திரனை (வேங்கி இளவரசன் விமலாதித்தனுக்கும் இராசராச சோழன் மகள் குந்தவைக்கும் பிறந்தவனை) வேங்கிநாட்டு மன்னனாக மணிமுடிசூட்டினான். தன்மகள் அம்மங்காதேவியை இராசராச நரேந்திரனுக்கு மணம் முடித்துவைத்தான். இவ்விருவருக்கும் பிறந்தவனே முதலாம் குலோத்துங்கசோழன் ஆவான்.““களவர்” என்ற வார்த்தை மருவி “களபர்” என்ற வார்த்தை பிறந்jது. களவர் என்போர் சுத்தத் தமிழர். முக்குலத்தோர். இரண்டு வார்த்தைகளுக்கும் வேறுபாடு அறிந்திருப்பது அவசியம். கள்ளர் என்பதன் மூலவார்த்தை களம் ஆகும். அதிலிருந்து பிறந்ததே களவர் என்ற வார்த்தை. களவர் என்ற ஒரே குடும்பத்திலிருந்து பிரிந்தவர்களே மறவரும் அகமுடையோரும் ஆவர். மூவரும் போர்க்களத்தொழிலையே செய்துவந்த ஒருதாய்வயிற்று மக்களாவர். போர்க்களத்தொழில் ஒரேகுடும்பத்திலிருந்து பிறந்தது. கள்ளர் என்போரே மூத்தவரானார். அவரே மற்ற இளையவர்களுக்கும் போர்பயிற்சி அளித்த குருவானார் எனலாம். தனக்கு போர்க்களத்தில் உதவிடும் பொருட்டே தன் இளையவர்களுக்கும் போர்பயிற்சிஅளித்து தன்நிழலைப்போல் பின்தொடர பழக்கியிருந்தனர் எனலாம்.

மறவர்(விளக்கம்): இவர்கள் களவர் குலத்தின் ஒருபிரிவினர் ஆவார். இவர்கள் வீர தீரத்துடன் ஊக்கம் காட்டி போர்புரிந்ததால், மறவர் என்று அழைக்கப்பட்டனர். மறம் என்றால் வீரம். வீரத்துடன் போரிட்ட தால் மறவர் என்ற பெயர் பெற்றனர்.இவர்கள் கோட்டைக்கு வெளியே அரணாக நின்று எதிரி படையை தடுத்துநிறுத்தி இறுதிகட்ட போர்புரிவர். இது இவர்களின் தலையாய பணியாக இருந்தது.

அகமுடையோர்(விளக்கம்): இவர்கள் களவர் குலத்தின் மற்றொரு பிரிவினர்ஆவார். இவர்கள் கோட்டையின்உள்ளே இருந்தபடி ,மதில்களின் மீது மறைந்து நின்றபடி கோட்டையை முற்றுகையிட வரும் எதிரியின் படைமீது குறி தவறாமல் அம்புமழை பொழிந்து, எதிரிகளை தடுத்து நிறுத்திப்போர் புரிந்தனர். வில்லில் நாண் ஏற்றி அதன் மீது அம்பைப்பூட்டி குறிதவறாமல் எதிரியின்மீது எய்தனர். அவ்வாறு எறிந்துஅவர்களைக் கொல்வதில் வல்லவர்கள். கோட்டையின் உள்ளேஇருந்தபடி போர்புரிந்ததால் அகமுடையோர் எனப்பெயர் பெற்றனர். அகம் என்றால் உள்ளே என்று பொருள்படும்.இவர்கள் கோட்டைக்கு உள்ளே இருக்கும் அரசகுடும்பத்தினர்கள், பெருந்தர மக்கள், அரசனின் சொத்துக்கள் அனைத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு இவர்களின் தலையாய கடமையாக இருந்தது அதற்காக கோட்டையின் மதில்கள்மீது நின்று அம்புமழைபொழிந்து எதிரிகளை கொன்றதோடு மட்டுமல்ல….கோட்டைப்பாதுகாப்புப்பொறிகளையும் பயன்படுத்தி கோட்டைமீது ஏறுகின்ற எதிரிகளை தாக்கி கொன்றனர். இவ்வாறு கோட்டைப்பாதுகாப்புப்பொறிகளை இவர்கள் பயன்படுத்திகொன்றனர் என்பதை இளங்கோவடிகள் பாடல் மூலம்கீழ்கண்டவாறு அறிகின்றோம்:

பாடல்: “மிளையும் கிடங்கும் விளைவிற் பொறியும், கருவிர லூகமும் கல்லுமிழ் கவனும் பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும், காய்பொன் லுலையும் கல்லிடு கூடையும் தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை யடுப்பும் சுவையுட்ம கழுவும் புதையும் புழையும் அய்யவித் சீப்பும் முழுவிற்ற் கணையமும் கோலும் குந்தமும் வேலும் பிறவும்………………..”பொருள்:

1)அம்பெய்யும் பொறி

2)கரிய விரலையுடைய குரங்குபோன்ற கடிக்கும் பொறி

3)கல்லெறியும் கவண்

4)கோட்டைமீதேற முயற்சிக்கும் எதிரிமீது காய்ச்சி ஊற்றும் எண்ணெய்

5)அவ்விதமான எண்ணெய் முதலியன ஊற்றுவதற்கான பாத்திரம்

6)இரும்பு கம்பிகளைக் காய்ச்சும் உலை

7)கல்லும் கவணும் வைக்கும் கூடை

8)கோட்டைமதில்மீது ஏற முயற்சிக்கும் எதிரிமீது மாட்டி இழுக்கும் தூண்டில்

9)சங்கிலி

10)எதிரியின்மீது வீச்ச் சேவல் போன்ற பொறி

11)அகழியைத்தாண்டி மேலே ஏறும் எதிரியைத்தாக்கி கீழேதள்ளும் இயந்திரம் 1

2)திடீரென பாயும் அம்புக்கூட்டம்

13)எதிரியின்மீது தீவீசும்,தீபந்தம் மற்றும் தீப்பொறி

14)சிற்றம்புகள் எய்யும் இயந்திரம்

15)மதிலின் மேல் உச்சியில் ஏறும் எதிரியின் கைகளைக்குத்தும் குத்தூசிகள்

16)மதிலில் ஏறியவனின் உடலைக்கிழிக்கும் இரும்பாற்செய்த பன்றி உருவமுடைய இயந்திரம்

17)மூங்கில் போன்ற உருவமுடைய இரும்பு உலக்கைகள்

18)கோட்டைக்கு ஆதரவாகப்போடப்படும் பெரிய மரக்கட்டைகள்

19)பெரியமரக்கட்டைகளை பிணைத்து குறுக்கே போடும் உத்திரங்கள்

20)தடி,ஈட்டி,வேல்,வாள் வீசும் இயந்திரப்பொறி. இக்கருவிகளைக்கொண்டு கோட்டைமீதிருக்கும் அகமுடையப்படையினர் போராடினர். இவ்வாறு போராடிய வீரர்கள் நொச்சிப்பூமாலை அணிந்துபோராடினர். எனவே, இது நொச்சித்தினை எனப்படும்.கள்ளர், மறவர், அகமுடையோர் என்னும் மூவரும் ஒருதாய்வயிற்றில் பிறந்தவர்கள்என்பதை விசயநகரப்பேர்ரசின் அமைச்சர் வெங்கய்யா அவர்கள் 1730ல் எழுதிய “தொண்டைமான் வம்சாவளி” என்றநூல் வலியுறுத்திக்கூறுகிறது. தொண்டைமான் கள்ளர் வம்சத்தினர் என்று “இராஜதொண்டைமான் அநுராகமாலை சுவடிகூறுகிறது. பூவிந்தபுராணம், கள்ளகேசரிபுராணம் கள்ளர்,மறவர், அகமுடையோர் ஒருதாய் வயிற்றில் பிறந்தவர்கள் என்றும் இந்திரகுலத்தார் என்றும் கூறுகின்றன. இன்றைக்கும் தேவர், சேர்வை ஆகிய பட்டங்கள் கள்ளர், மறவர், அகமுடையோர் ஆகிய மூவருக்குமே உள்ளதை நுண்மான் நுழைபுலம்கொண்டு நுணுகிஆராய்ந்தால், இவர்கள் மூவரும் ஒரு தகப்பனுக்குப்பிறந்த, ஒருதாய்வயிற்றுப் பிள்ளைகள் என்பதை எளிதில் உணரலாம். தகப்பனின் பட்டப்பெயரே அவன் பெற்ற ஆண்மக்களுக்கும் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வந்துகொண்டிருப்பது நடைமுறையிலுள்ள மரபு ஆகும். அவ்வாறே தேவர், சேர்வை என்ற பட்டங்கள் ஒருதகப்பன் பெற்ற மூன்று ஆண்மக்களுக்கும்(கள்ளர்,மறவர், அகமுடையோர் ஆகிய மூன்று ஆண்மக்களுக்கும்) வந்துள்ளது. பன்னிருபடலமும், புறப்பொருள்வெண்பாமாலையும் களவர் குலத்திலிருந்து பிறந்த முக்குலத்தோர் போர் செய்த முறைகளை முக்கியமாக எட்டு தினைகளாக்கி விவரித்துக் கூறுகின்றன.அவைகள் வருமாறு:-1)வெட்சித்தினை: வேந்தனால் ஏவிவிடப்பட்ட வெட்சிமறவர் கள்வர்கள் படை பகைஅரசனின் நாட்டிற்குள் புகுந்து காவற்படையை வென்று ஆநிரைகளைக் கவர்ந்து வந்து, ஊர்மன்றத்தில் கொண்டுவந்து நிறுத்துதல். “வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக்களவின் ஆதந்து ஓம்பல் மேவற்றாகும் வெட்சி” என்று தொல்காப்பியர் பாடியுள்ளார். மற்றொரு இடத்தில் “தன்னுறு தொழிலே வேந்துறு தொழில் என்றன்ன இருவகைத்தே வெட்சி” என்று பாடியுள்ளார்(இ.வி.சூ.602 மேற்.) வெட்சிப்பூ மாலை அணிந்து போராடியதால் இது வெட்சித்தினை ஆயிற்று.(இதன் விளக்கத்தை எம்_130 மரபணு கள்ளர்களுக்கே உள்ளது என்ற என்னுடைய மற்றொரு கட்டுரையில் காண்க)2)கரந்தைத்தினை: வெட்சிமறவர் கள்வர்கள் படை கவர்ந்து சென்ற ஆநிரைகளை, அவர்கள் நாட்டின் ஊர்மன்றத்திற்குள் கொண்டுபோய் சேர்க்கும் முன் அவர்களை வழிமறித்து வெட்சிமறவர் கள்வர்படையை வென்று, இழந்த ஆநிரைகளை மீட்டு வருதல். இவர்கள் கரந்தைப்பூ மாலை அணிந்து போராடியதால், இது கரந்தைத்தினை ஆயிற்யறு.(வெட்சித்தினை, கரந்தைத்தினை ஆகிய இருபோர்களையும் செய்தவர்கள் கள்ளர்களே ஆவர். இதனை தொல்காப்பியரின் பன்னிருபடலத்தில் காணலாம்.)3)வஞ்சித்தினை: பகைஅரசனின் நாட்டைக்கைப்பற்றக் கருதிய வேந்தன், பகைநாட்டின்மீது போர்தொடுத்தல். (கள்ளர், மறவர்,அகமுடையோர் ஆகிய மூன்றுபடைகளும் இணைந்து பகைமன்னனின் நாட்டின்மீது படைஎடுத்துப்போய் போர் தொடுத்தல்) வஞ்சிப்பூ மாலைஅணிந்துபோராடுவர்.4)காஞ்சித்தினை: நாட்டைக்கவர படையெடுத்து வரும் அரசனின் படைகளை எதிர்த்து போராடுதல் (கள்ளர்,மறவர் படைகள் இணைந்து நாட்டைக்கவர வரும் எதிரி அரசனின்படைகளை எதிர்த்து நின்று போராடுதல்)5)நொச்சித்தினை: பகைவர் படையின் முற்றுகையிலிருந்து கோட்டையை காக்க கோட்டைமீதிருந்து எதிரிகள் மீது அம்புமழைபொழிந்து தாக்கும் அகமுடையோர் படையின்(வில்லாளிகள்) போர். அகமுடையோர்படை கோட்டைமேலிருந்து அம்புமழைபொழிந்து தாக்குவர். அதேநேரத்தில், கோட்டையை முற்றுகையிடும் எதிரிபடைகளுடன் கோட்டைவாசலில் பாதுகாப்பாகநின்று கள்ளர்,மறவர் படைகள் இணைந்து எதிரியுடன் போர் செய்வர். நொச்சிப்பூமாலை அணிந்து போராடுவர்.6)உழிஞைத்தினை: பகைவரது கோட்டையை சுற்றிவளைத்து முற்றுகையிட்டு, கோட்டையின்காவலை உடைத்து, கோட்டைக்குள்புக எதிரிநாட்டரசன் படைகள் நடத்தும்போர். எதிரிநாட்டின் கள்ளர், மறவர் அகமுடையோர்(வில்லாளிகள்) படைகள் மூன்றும் இணைந்து நடத்தும்போர். உழிஞைப்பூ மாலை அணிந்து போராடுவர்.

7)தும்பைத்தினை: இரண்டு நாட்டு அரசர்களின் படைகளும் நேருக்கு நேர் மோதி நடத்தும் இறுதிகட்டப் போர். (இப்போரில் இரண்டு நாடுகளின் கள்ளர்,மறவர்,அகமுடையோர்(வில்லாளிகள்) படைகள் நேருக்குநேர் கடுமையாக மோதிக்கொள்ளும் இறுதிகட்டப்போர். தும்பைப்பூ மாலை அணிந்து போராடுவர்..8)வாகைத்தினை: இரண்டு நாடுகளின் கள்ளர், மறவர், அகமுடையோர்படைகளும் போரிட்டு ஒருநாடு வெற்றி வாகைசூடும் போர். வெற்றிபெற்ற படைகள் வாகைப்பூ மாலை சூடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்வர்

கள்ளர் என்ற வார்த்தை களம் என்ற மூலவார்த்தையிலிருந்து பிறந்ததுபோல், வேறு எந்த இனமும், களம் என்ற வார்த்தையிலிருந்து பிறக்கவில்லை. இந்த அடிப்படைஉண்மையை அறியாது எழுதப்படும் வரலாறு, பெருக்கல்வாய்ப்பாடு அறியாத மாணவன் போடுகின்ற கணக்கின் விடைபோல் தவறாகவே முடிந்துவிடும்.களவர் குலத்தினராகிய நம்முன்னோர்கள் ஆற்றிய போரினையே 2300ஆண்டுகளுக்கு முன் அகத்தியரின் மாணவர்களாகிய பன்னிருவர் எழுதியுள்ளனர். அப்பன்னிரு மாணவர்களில் முக்கியமானவர் தொல்காப்பியர். தொல்காப்பியரே முதல் இருபடலங்களை எழுதியுள்ளார். அவ்விரு படலங்களே வெட்சித்தினையும் கரந்தைத்தினையும் ஆகும். வெட்சிச்தினையிலும் கரந்தைத்தினையிலும் கள்ளர்கள் ஆற்றிய போரையே தொல்காப்பியர் தெளிவாக பாடியுள்ளார். அதன்பிறகு ஐயனாரிதனார் என்னும் சேரர்குடியைச்சேர்ந்த புலவரும் கி,பி,9ஆம் நூற்றாண்டில் புறப்பொருள்வெண்பாமாலையை பாடியுள்ளார். இப்பன்னிருபடலமும் புறப்பொருள் வெண்பாமாலையும் களவர் என்ற நம் முன்னோர்கள் ஆற்றிய குலத்தொழில் போரைமிகத்தெளிவாக படம்பிடித்துக்காட்டுகின்றன.இக்களவர் என்ற பெயரையே, இராஜராஜசோழனின் கல்வெட்டில் கள்வன் ராஜராஜன் என்றும் களப ராஜராஜன் என்றும் பொறித்துவைத்துள்ளார். “களப” என்ற வார்த்தையும் “கள்வன்” என்ற வார்த்தையும் கள்ளர் இனத்தைக்குறிக்கும் இரு வார்த்தைகளாகும். இவ்விருவார்த்தைகளும் ஒரே பொருளைத்தன் குறிக்கின்றன. எனவேதான், கல்வெட்டு 1ல் “களப என்றும் மற்றொரு கல்வெட்டில் களப என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, அவ்வார்த்தைக்குப்பதிலாக எளிதில் புரியக்கூடிய “கள்வன்” என்ற வார்த்தையையும் வெட்டிவைத்துள்ளனர். இவ்வார்த்தைகள் கள்ளர்கள் முற்காலத்தில் செய்த குலத்தொழிலைக்குறிக்கும் காரணப்பெயர்களாகும் என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறேன். எனவே, சோழமன்னர்கள் அனைவரும் வீரஇனமாகிய கள்ளர் குலத்தவரே ஆவர்நன்றி திரு.சம்பந்த மூர்த்தி மழவராயர்

கப்பலோட்டிய தமிழன் யார்?

நாட்டின் விடுதலை இயக்கத்திலே பெரும் பங்கேற்று செயலாற்றி வந்தவர் சிதம்பரம் பிள்ளை அவர்கள். வ.உ.சி என்ற மூன்றெழுத்து பெயர் பெற்றவர். வெள்ளையருக்கு எதிராக மரக்கலம் (கப்பல்) விடுக்க முன் வந்தவர். அதற்கு உரிய திட்டங்கள் தீட்டினார். அதை நிறைவேற்ற பெரும் பொருள் தேவையாக இருந்தது அவருக்கு.


“தேசிய இயக்கத்தில் ஈடுபட்ட வ.உ.சி. வெறும் பிரச்சாரத்தோடு நின்றுவிடவில்லை. அன்று தூத்துக்குடிக்கும் இலங்கையிலுள்ள கொழும்புவுக்கும் இடையே கப்பலை நடத்திக் கொண்டிருந்தது ஒரு பிரிட்டிஷ் கம்பெனி. அதற்கு போட்டியாக ஒரு கம்பெனியின் மூலம் கப்பல் ஓட்டவேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது வ.உ.சிக்கு

ஓட்டப்பிடாரத்தில் அவருக்கு ஒரு சிறிய பூமிதான் சொந்தம். அந்த நிலத்தை விற்று கிடைத்த தொகையை “சுதேசி ஸ்டீம் நாவிகேசன் கம்பெனி” என்ற கப்பல் கம்பெனியின் மூலதனப் பங்குகளாகப் போட்டார்” என்று “விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்” என்ற தமது நூலின் பக். 27 ல் தோழர் பி.இராமமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்த உண்மையான செய்தியை(!) பின்பற்றி அறிஞர் பலரும் எழுதியுள்ளனர்.

அன்று சிறிய பூமியை விற்றதில் எவ்வளவு பணம் கிடைத்திருக்கும்? ஆயிரக்கணக்கான பணம் தேவையல்லவா?

வரலாற்றில் நடைபயின்று, தம் வாழ்க்கையையே நாட்டு வரலாறாக ஆக்கிக் கொண்ட தோழர் இராமமூர்த்தி அவர்கள் இளைய தலைமுறையினருக்கு உண்மை வரலாறுகளை எடுத்துக்காட்டும் வலிமையான ஊன்றுகோல் தான் இதுவா! ஊறுவிளைவிக்கும் கோலாகுமல்லவா!

தூத்துக்குடியில் சாதாரண வழக்குரைஞராக இருந்த வ.உ.சி. அவர்களுக்குப் பெரும் பொருள் தேடுவது எளிதாக இல்லை. அப்பொழுது, பாலவநத்தம் குறுநில மன்னர், செந்தமிழ்க் குரிசில் வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்களது கொடைச் சிறப்பினை அறிந்தார்.

1906ம ஆண்டு ஜூலைத் திங்கள் 25ம் நாள் முகவை சென்று வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்களைக் கண்டார். தமது எண்ணங்களைத் தெரிவித்தார். பொருள் உதவியும் வேண்டினார்.

தெய்வீகப் பற்றும் தேசிய உணர்வும் பொங்கிக் ததும்பி நின்ற வள்ளல் தேவர் அவர்கள் சிதம்பரம் பிள்ளை அவர்களது கருத்துக்களை முழுமையான ஏற்றுக் கொண்டார். அவரைப் பாராட்டி ஊக்குவித்தார். இரண்டு இலட்சம் வெண்பொற்காசுகள், கடனாக அல்ல, நன்கொடையாக வழங்கினார். இந்தக் கப்பல் கம்பனி மூலமாக கிடைக்கும் வருவாயை மதுரைத் தமிழ்ச் சங்கம் பெற ஏற்பாடுகளும் செய்திருந்தார். மேலும் தனது நண்பர்களை எல்லாம் பங்கு பெறச் செய்து பெரும் பொருள் உதவி செய்தார்.

“சுதேசி ஸ்டீம் நேவிகேசன் கம்பெனி” என்ற பெயரில் மரக்கலப்பணி உருவானது. வெள்ளையர்களுக்கு எதிராக எவரும் முன்வராது அஞ்சி நின்ற நிலையில், வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் மரக்கால அணிக்குத் தலைமையும், செயலாளர் பொறுப்பும் ஏற்றுக் கொண்டார். 1906ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 16ம் நாள் கம்பனி பதிவு செய்யப்பட்டது. – “தேவர் முரசு”, செப்டம்பர் 1981.

(வள்ளல் பாண்டித்துரைத் தேவர் தான் 1911ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 14 ம் நாள் தமிழ்க்கோவில் என்னும் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் தோற்றுவித்தார். உக்கிரப் பெருவழுதி பாண்டியன் காலம் 3ம் தமிழ்ச் சங்கம் அழிந்தது. மீண்டும் உக்கிரப் பாண்டியன் என்ற வள்ளல் பாண்டித்துரைத் தேவரால் 4ம் சங்கம் தோற்றுவிக்கப் பட்டது.)

என்றாலும், தொடர்ந்து இதர கம்பெனிகளுடன் போட்டியிட முடியா நிலையினாலும் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் இன்னல்களாலும் விரைவில் மூடப்பட்டது.

வெள்ளையர்களுக்குக் கட்டுப்பட்டிருந்த குறுநில மன்னர் வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள், அவர்களுக்கு எதிராகத் துவக்கப்பட்ட சிதம்பரம் பிள்ளை மரக்கலப்பணிக்கு உதவியதால், தலைமையும் ஏற்று தாமே ஏற்றுக் கொண்டதால் அடைந்த இன்னல்கள் ஏராளம், ஏராளம். எழுதத்தரமன்று அவையாவையும் இங்கே. பாலவநத்தம் ஜாமீனே அழிந்தது, என்பது எல்லாம் இங்கே மறைக்கப்பட்டு விட்டது ஏன்?

சிதம்பரம் பிள்ளை அவர்கள் நேரடியாக வள்ளல் தேவர் அவர்களைக் கண்டும் இரண்டு இலட்ச வெண்பொற்காசுகள் நன்கொடையாகப் பெற்றுக் கொண்டும், அவர்களே தலைமையாகவும் ஏற்றுக் கொண்டுள்ள ஒரு செய்தியை தோழர் இராமமூர்த்தி மறைப்பதன் நோக்கம் என்ன? ஏன்?

தேசியச் செம்மல்:

1901ம் ஆண்டு மே திங்கள் 21,22,23 ஆகிய நாட்களில் சென்னை மாகாண அரசியல் மாநாடு திரு . அனந்தா சாரலு தலைமையில் மதுரையில் நடைபெற்றது. வள்ளல் தேவர் அவர்கள் வரவேற்ப்புக் குழு தலைவராக இருந்து அரும்பணிகள் ஆற்றினார்கள். அம்மாநாட்டில் தாம், அறிவிக்கப்பட்ட படியே மதுரையில் தமிழ்ச் சங்கம் என்னும் தமிழ்க் கோவில் நிறுவினார்கள்.

இந்தச் தமிழ்ச் சங்கம் தான் வடக்கு வெளிவீதியில் கலையுலகு போற்றும் கன்னித் தமிழ் கோயிலாகக் காட்சி தருகிறது. தமிழ்க் கொண்டல் வள்ளல் தேவர் அவர்களது நூற்றாண்டு விழா நடத்தியும் மலர் ஒன்றும் வெளியிட்டது. (வள்ளல் பாண்டித்துரைத் தேவர் பைந்தமிழ் பேரவை, அதன் பொதுச் செயலாளர் தான், தமிழ்த் தொண்டன் வி.ஆ.ஆண்டியப்பத்தேவர் அவர்கள் இக்கட்டுரையின் ஆசிரியர்).

இதைப் பல அரசியல் கட்சிகளுடனும் தொண்டர்களுடனும் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த தோழர் இராமமூர்த்தி அறியாததா?

எந்த அடிப்படையில் எழுதினார்?

இளைய தலைமுறையினருக்கு வரலாறு எடுத்துக்காட்டும் முறையா? அவரது நினைவில் இல்லாமல் போய்விட்ட குறையா?

உண்மை வரலாறுகளை எடுத்க்காட்டத் தவறிவிட்டார் தோழர் இராமமூர்த்தி என்பதை சுட்டிக்காட்ட வேண்டியதிருக்கிறது.

(“செக்கிழுத்த செம்மல்” திரு.வ.உ.சி.அவர்களை குறைத்து மதிப்பிடும் நோக்கம் சிஞ்சிற்றும் இல்லாது இக்கட்டுரை இங்கே பதியப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம், உண்மை விளம்ப வேண்டுதாயும், மறைக்கப்பட்ட உண்மை வரலாறு எம் தமிழர் புரியவேண்டுமாயும் இக்கட்டுரை பதியப்படுகிறது)

எனவே, கப்பலோட்டிய தமிழன் யாரென்றால் சேதுநாடு, செந்தமிழ்க் குரிசில், பாலவநத்தம் குறுநிலமன்னர், வள்ளல் பொன். பாண்டித்துரைத் தேவர் அவர்களேயாவர் என்பதை இமயத்தின் உச்சியில் நின்று கூறலாம்.நன்றி ::thevar.co.in..