சிவகங்கைச் சீமையின் வீரமங்கையர்

rani-velu-nachiyarஎழுதியவர்: கீதா ரவீந்திரன்
சிவகங்கை நகரம் தனது பெயரை இழந்து உசேன் நகர் என்ற பெயர் தாங்கி, பெருமை இழந்து கிடந்தது.  இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சிவகங்கை ராணி வேலுநாச்சியாரின் வீரப்படை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு போர்முரசு கொட்டிப் புறப்பட்டது.  சுதந்திர தாகம் கொண்ட அந்தப் படையின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் கோச்சடை மல்லாரிராயன், திருப்புவனம் ரங்கராயன், மானாமதுரை பிரைட்டன், பூரியான், மார்டினஸ் ஆகியோர் மண்டியிட்டனர்.

சேதுபதியின் வீரம்

மேற்கே மலைப்பகுதிகளில் இடையறாது அடைமழை பெய்ததால் நீர்ப்பெருக்கு அதிகமாகி சிக்க தேவராயன் காவிரியின் குறுக்கே எடுத்திருந்த அணை தானே நலிந்து நகர்ந்து போய்விட்டது. அப்போதிருந்த பயங்கரமான வெள்ளப் பெருக்கில் சிக்க தேவராயன் மறுபடி காவிரியை வழிமறித்து நிறுத்தலாம் என்று நினைக்கக்கூட முடியவில்லை. காவிரி மீண்டும் தன் இஷ்டப்படி ஓடினாள்.

     திரிசிரபுரம் தஞ்சைப் பகுதிகளில் காவிரியில் வெள்ளம் இருகரையும் நிமிர ஓடியது. வறட்சி தவிர்ந்தது. உழவர்களின் துயரம் ஒழிந்தது. இதனால் மைசூரின் மேல் படை எடுப்பது என்ற திட்டம் கைவிடப்பட்டது. ஆனாலும் காவிரி நீர்ப் பிரச்சினை காரணமாகத் திரிசிரபுரத்துக்கும், தஞ்சைக்கும் ஏற்பட்ட ஒற்றுமை மட்டும் தொடர்ந்து நீடித்தது. அந்த நட்பு வேறொரு படையெடுப்புக்குப் பயன்பட்டது. வேறொரு படையெடுப்புக்கு அவசியமும் ஏற்பட்டது.

மறவர் கதைப்பாடல்கள்

ஆசிரியர்:முனைவர் மு.ஞானத்தாய்
வெளியீடு:காவ்யா பதிப்பகம்
காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-600 024.
இனவரைவியல் ஆய்வு நூல் இது. திருநெல்வேலி மாவட்ட மறவர் இனக் கதைப்பாடல்கள் பற்றியது. முக்குலத்தோரில் கள்ளர், அகமுடையார் குறித்துப் பொதுவாகவும், மறவர் பற்றிச் சிறப்பாகவும் "மறவரின் வரலாறும் வாழ்வும்' என்னும் முதல் இயல் பேசுகிறது.
கள்ளர் சோழர் வழித்தோன்றல், அகமுடையார் சேரர் வழித்தோன்றல், மறவர் பாண்டியர் வழித்தோன்றல் எனக்குறித்து அவற்றுக்குரிய புராணம், இலக்கியம், வரலாற்றுச் செய்தி, வரலாற்று ஆய்வாளர் கருத்து என்பவற்றை ஆதாரமாகக் காட்டி எதிர்கால ஆய்வு ஆழம் காணப் பல வித்துக்கள் இவ்வியலில் ஊன்றப்பட்டுள்ளன.

நடிகர் முத்துராமன்

முத்துராமன் காலஞ்சென்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். நடிகர் கார்த்திக் இவரது மகன் ஆவார். இவர் 1960-1970களில் முண்ணனி நடிகராக இருந்தார். நவரச திலகம் எனவும் அழைக்கப் பட்டார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அக்காலத்திய முன்னணி இயக்குனர்களான ஸ்ரீதர் கே.பாலச்சந்தர் ஆகியோரின் திரைப்படங்கள் பலவற்றிலும் இவர் நடித்துள்ளார்.

மாமன்னன் ராஜராஜ சோழன்

- அண்ணாமலை சுகுமாரன்  புதுச்சேரி


சொல்லச்சொல்ல அலுக்காத சில சங்கதிகளில் இராஜராஜனின் வரலாறு பற்றிய குறிப்புகளும் முக்கியமான ஒன்றாகவே இருக்கிறது.இன்றோ அந்த மாமன்னனின் 1025 வது சதய திருநாள் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். வேறு எந்த மன்னனின் பிறந்த நாளாவது உலகில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கொண்டாடப்படுகிறதா ? என்பது மிகப்பெரிய ஒரு அதிசயமான கேள்விதான்.அதுவும் இந்த மாமன்னனின் பிறந்தநாள் கல்வெட்டுகளின் மூலம் உறுதி செய்யப்பட்ட ஒன்று.

இராசராசன் சித்திரைத் திங்கள் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் என மன்னரது திருப்புகலூர் கல்வெட்டும் முதலாம் இராசேந்திர சோழரின் எண்ணாயிரம் கல்வெட்டும் கூறுவதாக  முனைவர்  சுவாமிநாதன் (கல்வெட்டாய்வாளர் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறை மைசூர்) கல்லெழுத்தில் காலச்சுவடுகள் (பக்கம் 38, 39) என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

29 ஆட்சி புரிந்த ஆண்டுகளில் எத்தனையோ போர்கள் வென்ற மன்னர்களின் எண்ணிக்கையோ முப்பதுக்கும் மேல்; இத்தனை போர்கள் நடந்தாலும் சோழநாடுஅவரின் ஆட்சியில்  செல்வ செழிப்பில் தவழ்ந்தது. வணிகம் முன் எப்போதும் இருந்திராத அளவு வளர்ந்திருந்தது. மக்கள் மிக மகிழ்ச்சியாகஇருந்திருக்கின்றனர்.பெண்கள் உரிமைபெற்று அதிகாரிச்சிகளாக அதிகாரம் செலுத்தி இருந்திருக்கின்றனர்.பெண்களின் உயர்வுதானே நாகரீக வளர்ச்சியின் அளவு கோள்.

இராஜ ராஜனே 'ஜன நாதன்' என பெயர் சூட்டி மக்கள் நாயகமாக, மக்கள் தலைவராக பெருமையுடன் இருந்திருக்கிறார். கலைகள் வளர்ந்தன. நாடெங்கும் பல புதிய கோயில்கள் கட்டப்பட்டன.அத்தனைகலைகளும் சிறப்பாக வளர்ந்தன. மறைந்து கிடந்த தேவாரம் தேடி திருப்பிப்பெறப்பட்டது.தேவாரப்பாடல்களுக்கு பண்கள் வகுக்கப்பட்டன.வென்ற நாட்டில் கூட பல கோயில்கள் கட்டினார்.

கன்னியாகுமரியில் ராஜராஜேஸ்வரம் என்று முதலில் ஒரு கோயில் கட்டியதாக வரலாற்று அறிஞர் முனைவர் பத்மநாபன் ஆராய்ந்து கட்டுரை எழுதி இருக்கிறார்.இப்போதும் அந்தக்கோயில் கன்னியாக்குமரியில், சிறப்புடன் வழிபாட்டில், கர்ப்பகிரகத்தை அடைத்துக்கொண்டு பெரிய லிங்கத் திருஉருவுடன் இருக்கிறது.எதையும் பெரிதாக செய்வதுதானே இந்த பெரு உடையாரின் பாணி.

இவரின் ஆட்சியில் நாடெங்கும் நிலங்கள் அளக்கப்பட்டன அதற்க்கு ஏற்றபடி முறையாக வரி விதிக்கப்பட்டது . கிராமங்களில் ஜன நாயகம் பலமாக இருந்தது. கிராம ராஜ்யம், நியாயமான தேர்தல், முறையான ஆட்சிக்கு வாரியங்கள், நிலையான ராணுவம் இத்தனையும் கொண்டு ஆட்சிமுறை வேரில் இருந்து ஆரம்பித்து  ஆழ்ந்து  நிலைத்திருந்தது.


இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தி:

"ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந்
தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக்
காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி
வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும்
தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்
எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும்
திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர்
ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே
செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்"உண்மையில் மெய்யான கீர்த்திகளை முறையாகக் கூறும் முறையை இந்த மாமன்னனே முதலில் ஏற்ப்படுத்தினான். இதற்க்கு முன் மன்னர்களில் பெருமையை கற்பனையாக புராணத்துடன் இணைத்து கூறப்படும் முறையே இருந்தது. இவரே உண்மையான சரித்திர சம்பவங்களை வருடக்கிரமமாக கூறும் முறையை வழக்கத்தில் கொண்டுவதார். வெற்றிகள் நீள நீள மெய்கீர்த்திகளின் நீளமும் வளர்ந்தது .

இவரின்  ஆட்சிக் காலத்தில் முதற்போர் கேரள நாட்டுடன் நடந்தது, இம்மன்னனது நான்காம் ஆண்டு முதல்   கல்வெட்டுக்களில் காணப்படும், 'காந்தளூர்ச் சாலை கலமறுத்த' என்ற பட்டத்தால்இது  விளக்கப்பட்டுள்ளது. இப்பட்டம் இராஜராஜனின் நான்காம் ஆண்டு கல்வெட்டிலேயே காணப்பட்டாலும், எட்டாம் ஆண்டிற்கு முற்பட்ட கல்வெட்டுகள் கேரளத்திலும் பாண்டிய நாட்டிலும் காணப்படவில்லை என்பதால் வெற்றி கொண்ட பகுதியைத் தன் நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டுவர சில ஆண்டுகள் பிடித்திருக்கலாம் என்று தெரிகிறது.அப்போது பல கோயில்களை இராஜராஜன் அந்தப்பகுதியில் எழுப்பியிருக்கிறார் .

இம்மன்னனின் வெற்றி பற்றித் தெளிவாகக் கூறும் திருவாலங்காட்டுப் பட்டயங்கள், இவர்  முதன் முதலில் தென் திசையிலேயே தன் வெற்றியை நிலைநாட்டினார்  என்று கூறுகிறது. தஞ்சையில் இராஜராஜ சோழன் எழுப்பிய சீரிய  கோயிலுக்கு ஈழத்தின் பல கிராமங்களை இவருடைய 29ம் ஆண்டில் தானமாக அளித்தான்' என்றும் ஈழப்படையெடுப்பைப் பற்றி திருவாலங்காட்டுப் பட்டயங்கள் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. இவரின் பெயர்கள் நகரங்களின் பெயர்களாக மாறியதோடு, வளநாடுகளும் மண்டலங்களும் இம்மன்னனின் பெயராலேயே அறியப்பட்டன.


இராசரானின் சிறப்புப்பட்டங்கள்:

1. இராசகண்டியன்
2. இராசசர்வக்ஞன்
3. இராசராசன்
4. இராசகேசரிவர்மன்
5. இராசாச்ரயன்
6. இராசமார்த்தாண்டன்
7. இராசேந்திரசிம்மன்
8. இராசவிநோதன்
9. இரணமுகபீமன்
10. இரவிகுலமாணிக்கன்
11. இரவிவம்சசிகாமணி
12. அபயகுலசேகரன்
13. அருள்மொழி
14. அரிதுர்க்கலங்கன்
15. பெரியபெருமாள்
16. அழகியசோழன்
17. மும்முடிச்சோழன்
18. பண்டிதசோழன்
19. நிகரிலிசோழன்
20. திருமுறைகண்டசோழன்
21. செயங்கொண்டசோழன்
 

இவை இல்லாமல் இன்னமும் பல இருந்திருக்கலாம். அதற்க்கான சில ஆதாரங்களை நான் சமீபத்தில் சில ஊர்களின் பெயரில் கண்டேன்.

மாமன்னன் இராசரானின் மனைவியர்

1. ஒலோக மகாதேவி - (தந்திசக்தி விடாங்கி) பட்டத்தரசி
2. சோழ மகாதேவி
3. அபிமானவல்லி மகாதேவி
4. திரைலோக்கிய மகாதேவி
5. பஞ்சவன்மகாதேவி
6. பிருத்திவிமகாதேவி
7. இலாடமகாதேவி
8. மீனவன் மகாதேவி - பாண்டிய நாட்டு இளவரசி
9. வானவன் மகாதேவி - இராசேந்திர சோழனின் தாய்
10. வில்லவன் மகாதேவி- சேர நாட்டு இளவரசி
11. வீரநாராயனி

இத்தனை மனைவிகள் இருந்தாலும் இராஜராஜனின் ஒரே மகனான இராஜேந்திரன் விளங்கியதும் ஒரு அதிசயம் தான்.இன்னமும் சொல்லப்போனால் சொல்லிக்கொண்டே போகலாம், அத்தனை தகவல்கள் தன்னைப்பற்றி விட்டு சென்றிருக்கிறார் இந்த மாமன்னன்.இந்த மன்னனைப் போல் பெண்களை மதித்தவரை சரித்திரத்தில் காண்பது அரிது.அக்கன் கொடுத்தது என வாஞ்சையுடன் அழைக்கும் பாங்கு ஒன்றேப் போதுமே.

இவருக்கு வழங்கி இருக்கும் இத்தனைப் பட்டபேர்களுடன் மேலும் இரண்டை நான் சமீபத்தில் விருது நகர் மாவட்டத்தில் சுற்றியபோது கண்டேன்.அவர் மகன் கங்கை கொண்டான் என்று அழைக்கப்பட்டது போல் இந்த மாமன்னன்  "கொல்லம் கொண்டான்" என்று அழைக்கப்பட்டிருக்கிறார். 'அய்யன் கொல்லம் கொண்டான்' என்ற  பெயரில் கொல்லம் செல்லும் சாலையில் ராஜப்பாளையம்  வட்டத்தில் ஒரு ஊர் இன்றும் இருக்கிறது.

மேலும் இலங்கையில் இருந்து இறை பெற்று தஞ்சை பெரிய கோயிலுக்கு கொடையாகத் தந்த தகவலுக்கு சான்றாக "ஈழம் திரை கொண்டான்" என்ற பெயரில் ஒரு ஊர் இன்னமும் அந்தப்பகுதியில் இருக்கிறது. ஆனால் அது திரிந்து 'இளந்திரை கொண்டான்' என வழங்குவதாக அப்பகுதி அறிஞர்கள் கூறுகின்றனர் .

இன்னும் எவ்வளவோ இம்மன்னனைப் பற்றி கூற இருக்கிறது. பத்து வயதில் பொன்னியின் செல்வன்  படித்து எழுந்த 'அருண்மொழி' பற்றிய ஆர்வத்தீ இந்த அறுபதிலும் சற்றும் குறையவில்லை. உண்மையில் தமிழ்நாட்டின் சின்னமாக, அவதார புருசனாக, மண்ணின் மைந்தனாக, மக்களின் கதாநாயகனாக யாராவது அறியப்பட வேண்டுமானால் அதற்கு இராஜ ராஜனை விட யார் பொருத்தமாக இருக்க முடியும் ...?
சிறப்பு நன்றி :


மாமன்னன் ராஜ ராஜ சோழன் பற்றிய பல அரிய தகவல்களை இணைய உலகிற்கு றி தந்த அய்யா.திரு. அண்ணாமலை சுகுமாரன் ( புதுச்சேரி) அவர்களுக்கு தேவர்தளத்தின் நன்றிகளை காணிக்கையாக்குகிறோம்.
"

தேவர்தளத்தின் அதிகாரப்பூர்வ இணைய முகவரிகள்

உறவுகளுக்கு வணக்கம்,

நமது வலைத்தளம் இப்போது இணையதளமாகவும் "தேவர்தளம்" என்ற 
(http://www.thevarthalam.comபுது முகவரியோடுகாலடி எடுத்து வைத்துள்ளது என்பதை பெரு மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது அதிகாரப்பூர்வ இணைய முகவரிகள்:


Orkut Community : http://www.orkut.co.in/Main#CommunityJoin?cmm=12855263

FaceBook community : http://www.facebook.com/group.php?gid=109288739106689


Google Groups: https://groups.google.com/group/thevargroup

Twitter Page : http://twitter.com/mukkulathor
 
Website : http://www.thevarthalam.com

Blog : http://www.thevarthalam.blogspot.com


உங்களது மேலான ஆதரவை நமது அனைத்து குழுமங்களுக்கும் எப்போதும் போலவே இப்போதும் தந்து உதவிட "தேவர்தளம்" உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.


நன்றி.


எக்குலமும் நலமாய் வாழட்டும்...! முக்குலமே தலைமையை ஆளட்டும்...!


அச்சுத களப்பாளன்

மெய்பொருள் நாயனார்

                                                                 [1]
“வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்” – திருத்தொண்டத்தொகை.


மெய்பொருள் நாயனார் சேதிநாட்டுத் திருக்கோவலூரிலிருந்து அரசாண்ட குறுநிலமன்னர் குலத்தில் அவதரித்தார். அக்குறுநில மன்னர்குலம் மாதொருபாகனார்க்கு வழிவழியாக அன்பு செய்து வந்த மலையான்மான்குலமாகும்.


நாயனார் அறநெறிதவறாது அரசு புரிந்துவந்தார். பகையரசர்களால் கேடுவிளையாதபடி குடிகளைக் காத்துவந்தார். ஆலயங்களிலே பூசை விழாக்கள் குறைவற நடைபெறக் கட்டளை விட்டார். ‘சிவனடியார்வேடமே மெய்ப்பொருள் எனச் சிந்தையிற் கொண்ட அவர் சிவனடியார்க்கு வேண்டுபவற்றைக் குறைவறக் கொடுத்து நிறைவு காணும் ஒழுக்கத்தவராக இருந்தார்.


இவ்வாறு ஒழுகிவந்த மெய்பொருள்நாயனாரிடம் பகைமைகொண்ட ஒரு மன்னனும் இருந்தான். அவர் பெயர் முத்தநாதன். அவன் பலமுறை மெய்பொருளாளருடன் போரிட்டுத் தோல்வியுற்று அவமானப்பட்டுப்போனான். வல்லமையால் மெய்பொருளாளரை வெல்லமுடியாதெனக் கருதிய அவன் வஞ்சனையால் வெல்லத்துணிந்தான்.
கறுத்த மனத்தவனான அவன் மெய்யெல்லாம் திருநீறு பூசி, சடைமுடி தாங்கி, ஆயுதத்தை மறைத்து வைத்திருக்கும் புத்தகமுடிப்பு ஒன்றைக் கையிலேந்தியவனாய்க் கோவலூர் அரண்மனை வந்தான். வாயிற்காவலர் சிவனடியாரென வணங்கி உள்ளே போகவிட்டனர். பல வாயில்களையும் கடந்த முத்தநாதன் பள்ளியறை வாயிலை அடைந்தான். அவ்வாயிற் காவலனான தத்தன் “தருணமறிந்து செல்லல் வேண்டும் அரசர் பள்ளிகொள்ளும் தருணம்” எனத் தடுத்தான். ‘வஞ்சமனத்தவனான அவன் அரசர்க்கு ஆகமம் உரைத்தற்கென வந்திருப்பதாயும், தன்னைத் தடைசெய்யக்கூடாதெனவும் கூறி உள்ளே நுழைந்தான். அங்கே அரசர் துயின்று கொண்டிருந்தார். அங்கேயிருந்த அரசி அடியாரின் வரவுகண்டதும் மன்னனைத் துயில் எழுப்பினாள். துயிலுணர்ந்த அரசர் எதிர்சென்று அடியாரை வரவேற்று வணங்கி மங்கலவரவு கூறி மகிழ்ந்தார். அடியவர் வேடத்திருந்தவர் எங்குமிலாதோர் சிவாகமம் கொண்டுவந்திருப்பதாகப் புத்தகப்பையைப் காட்டினார். அவ்வாகமப் பொருள் கேட்பதற்கு அரசர் ஆர்வமுற்றார். வஞ்சநெஞ்சினான அவ்வேடத்தான் தனியிடதிலிருந்தே ஆகம உபதேசஞ் செய்யவேண்டும் எனக் கூறினான்.


மெய்பொருளாளர் துணைவியாரை அந்தப்புரம் செல்லுமாறு ஏவிவிட்டு அடியவருக்கு ஓர் ஆசனமளித்து அமரச் செய்தபின் தாம் தரைமேல் அமர்ந்து ஆகமப்பொருளைக் கேட்பதற்கு ஆயத்தமானார். அத்தீயவன் புத்தகம் அவிழ்ப்பான் போன்று மறைத்து வைத்திருந்த உடைவாளை எடுத்துத் தான் நினைத்த அத் தீச் செயலை செய்துவிட்டான். வாளால் குத்துண்டு வீழும் நிலையிலும் சிவவேடமே மெய்பொருள் என்று தொழுதுவென்றார். முத்தநாதன் நுளைந்த பொழுதிலிருந்து அவதானமாய் இருந்த தத்தன், இக்கொடுரூரச் செயலைக் கண்ணுற்றதும் கணத்திற் பாய்ந்து தன் கைவாளால் தீயவனை வெட்டச் சென்றான். இரத்தம் பெருகச் சோர்ந்துவிழும் நிலையில் இருந்த நாயனார் “தத்தா நமரே காண்” என்று தடுத்து வீழ்ந்தார். விழும் மன்னனைத் தாங்கித் தலைவணங்கி நின்ற தத்தன் ‘அடியேன் இனிச் செய்யவேண்டியது யாது?’ என இரந்தான். “இச்சிவனடியாருக்கு ஓர் இடையூறும் நேராதவாறு பாதுகாப்பாக விட்டுவா” என்று மெய்பொருள் நாயனார் பணித்தார். மெய்பொருளாளரது பணிப்பின் படியே முத்தநாதனை அழைத்துச் சென்றான் தத்தன். செய்தியறிந்த குடிமக்கள் கொலை பாதகனைக் கொன்றோழிக்கத் திரண்டனர். அவர்களுக்கெல்லாம் “அரசரது ஆணை” எனக் கூறித்தடுத்து நகரைக் கடந்து சென்று நாட்டவர் வராத காட்டெல்லையில் அக்கொடுந் தொழிலனை விட்டு வந்தான் தத்தன். வந்ததும் அரசர் பெருமானை வணங்கி “தவவேடம் பூண்டு வந்து வென்றவனை இடையூறின்றி விட்டு வந்தேன்” எனக் கூறினான். அப்பொழுது மெய்பொருள் நாயனார் “இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய்யவல்லார்” எனக் கூறி அன்பொழுக நோக்கினார். பின்னர் அரசுரிமைக்கு உடையோரிடமும், அன்பாளரிடமும் “திருநீற்று நெறியைக் காப்பீர்” எனத் திடம்படக் கூறி அம்பலத்தரசின் திருவடி நிழலைச் சிந்தைசெய்தார். அம்பலத்தரசு அம்மையப்பராக மெய்பொருளாளன்பாருக்குக் காட்சியளித்தனர். மெய்பொருளாளார். அருட்கழல் நிழல் சேர்ந்து இடையறாது கைதொழுதிருக்கும் பாக்கியரானார்.
தேங்க்ஸ் டு http://ta.wikipedia.org/wiki/மெயà¯�பà¯�பொரà¯�ளà¯�_நாயனாரà¯�


“வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கடியேன்” – திருத்தொண்டத்தொகை.


                                                                     [2]
மெய்பொருள் நாயனார் சேதிநாட்டுத் திருக்கோவலூரிலிருந்து அரசாண்ட குறுநிலமன்னர்குலத்தில் அவதரித்தார். அக்குறுநில மன்னர்குலம் மாதொருபாகனார்க்கு வழிவழியாக அன்புசெய்து வந்த மலையான்மான்குலமாகும். நாயனார் அறநெறிதவறாது அரசு புரிந்துவந்தார். பகையரசர்களால்கேடுவிளையாதபடி குடிகளைக் காத்துவந்தார். ஆலயங்களிலே பூசை விழாக்கள் குறைவற நடைபெறக்கட்டளை விட்டார். ‘சிவனடியார்வேடமே மெய்ப்பொருள் எனச்சிந்தையிற் கொண்ட அவர் சிவனடியார்க்கு வேண்டுபவற்றைக் குறைவறக் கொடுத்து நிறைவுகாணும் ஒழுக்கத்தவராக இருந்தார்.


இவ்வாறுஒழுகிவந்த மெய்பொருள்நாயனாரிடம் பகைமைகொண்ட ஒரு மன்னனும் இருந்தான். அவர் பெயர்முத்தநாதன். அவன் பலமுறை மெய்பொருளாளருடன் போரிட்டுத் தோல்வியுற்றுஅவமானப்பட்டுப்போனான். வல்லமையால் மெய்பொருளாளரை வெல்லமுடியாதெனக் கருதிய அவன்வஞ்சனையால் வெல்லத்துணிந்தான். கறுத்த மனத்தவனான அவன் மெய்யெல்லாம் திருநீறு பூசி, சடைமுடி தாங்கி, ஆயுதத்தை மறைத்து வைத்திருக்கும் புத்தகமுடிப்பு ஒன்றைக்கையிலேந்தியவனாய்க் கோவலூர் அரண்மனை வந்தான். வாயிற்காவலர் சிவனடியாரென வணங்கிஉள்ளே போகவிட்டனர். பல வாயில்களையும் கடந்த முத்தநாதன் பள்ளியறை வாயிலை அடைந்தான்.அவ்வாயிற் காவலனான தத்தன் “தருணமறிந்து செல்லல் வேண்டும் அரசர்பள்ளிகொள்ளும் தருணம்” எனத் தடுத்தான். ‘வஞ்சமனத்தவனான அவன் அரசர்க்கு ஆகமம் உரைத்தற்கெனவந்திருப்பதாயும், தன்னைத் தடைசெய்யக்கூடாதெனவும் கூறிஉள்ளே நுழைந்தான். அங்கே அரசர் துயின்று கொண்டிருந்தார். அங்கேயிருந்த அரசிஅடியாரின் வரவுகண்டதும் மன்னனைத் துயில் எழுப்பினாள். துயிலுணர்ந்த அரசர்எதிர்சென்று அடியாரை வரவேற்று வணங்கி மங்கலவரவு கூறி மகிழ்ந்தார். அடியவர்வேடத்திருந்தவர் எங்குமிலாதோர் சிவாகமம் கொண்டுவந்திருப்பதாகப் புத்தகப்பையைப்காட்டினார். அவ்வாகமப் பொருள் கேட்பதற்கு அரசர் ஆர்வமுற்றார். வஞ்சநெஞ்சினானஅவ்வேடத்தான் தனியிடதிலிருந்தே ஆகம உபதேசஞ் செய்யவேண்டும் எனக் கூறினான்.மெய்பொருளாளர் துணைவியாரை அந்தப்புரம் செல்லுமாறு ஏவிவிட்டு அடியவருக்கு ஓர்ஆசனமளித்து அமரச் செய்தபின் தாம் தரைமேல் அமர்ந்து ஆகமப்பொருளைக் கேட்பதற்குஆயத்தமானார். அத்தீயவன் புத்தகம் அவிழ்ப்பான் போன்று மறைத்து வைத்திருந்த உடைவாளைஎடுத்துத் தான் நினைத்த அத் தீச் செயலை செய்துவிட்டான். வாளால் குத்துண்டு வீழும்நிலையிலும் சிவவேடமே மெய்பொருள் என்று தொழுதுவென்றார். முத்தநாதன் நுளைந்தபொழுதிலிருந்து அவதானமாய் இருந்த தத்தன், இக்கொடுரூரச் செயலைக் கண்ணுற்றதும்கணத்திற் பாய்ந்து தன் கைவாளால் தீயவனை வெட்டச் சென்றான். இரத்தம் பெருகச் சோர்ந்துவிழும் நிலையில்இருந்த நாயனார் “தத்தா நமரே காண்” என்று தடுத்து வீழ்ந்தார். விழும் மன்னனைத் தாங்கித் தலைவணங்கிநின்ற தத்தன் ‘அடியேன் இனிச் செய்யவேண்டியது யாது?’ என இரந்தான். “இச்சிவனடியாருக்கு ஓர் இடையூறும்நேராதவாறு பாதுகாப்பாக விட்டுவா” என்று மெய்பொருள் நாயனார் பணித்தார்.மெய்பொருளாளரது பணிப்பின் படியே முத்தநாதனை அழைத்துச் சென்றான் தத்தன். செய்தியறிந்தகுடிமக்கள் கொலை பாதகனைக் கொன்றோழிக்கத் திரண்டனர். அவர்களுக்கெல்லாம் “அரசரது ஆணை” எனக் கூறித்தடுத்து நகரைக் கடந்துசென்று நாட்டவர் வராத காட்டெல்லையில் அக்கொடுந் தொழிலனை விட்டு வந்தான் தத்தன்.வந்ததும் அரசர் பெருமானை வணங்கி “தவவேடம் பூண்டு வந்து வென்றவனைஇடையூறின்றி விட்டு வந்தேன்” எனக் கூறினான். அப்பொழுது மெய்பொருள்நாயனார் “இன்று எனக்கு ஐயன் செய்தது யார்செய்யவல்லார்” எனக் கூறி அன்பொழுக நோக்கினார். பின்னர்அரசுரிமைக்கு உடையோரிடமும், அன்பாளரிடமும் “திருநீற்று நெறியைக் காப்பீர்” எனத்திடம்படக் கூறி அம்பலத்தரசின் திருவடி நிழலைச் சிந்தைசெய்தார். அம்பலத்தரசுஅம்மையப்பராக மெய்பொருளாளன்பாருக்குக் காட்சியளித்தனர். மெய்பொருளாளார். அருட்கழல்நிழல் சேர்ந்து இடையறாது கைதொழுதிருக்கும் பாக்கியரானார்.
THANKS TO http://kallarperavai.webs.com/apps/blog/entries/show/1996653-meiporul-nayanaar
                                                                   [3]
சேதிராயர்
முனைவர் மு. பழனியப்பன்


பன்னிரு திருமுறைகளில் இசைப்பா என்று இசையின் பெயரால் அழைக்கப்பெறும் திருமுறை திருவிசைப்பா ஆகும். இது ஒன்பதாம் திருமுறையின் ஒரு பகுதியாகும். இதனுடன் சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டும் இணைந்து இத்திருமுறை முழுமை பெறுகின்றது.


சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக்குரவர்களின் பாடல் தொகுப்புகளுக்கு அடுத்தநிலையில் திருவிசைப்பா, திருப்பல்லாண்டு அமைக்கப் பெற்றிருப்பதன் வழியாக இத்திருமுறையின் பெருமையை உணர்ந்து கொள்ள இயலும்.


இந்த ஒன்பதாம் திருமுறை- திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பிகாட நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தமர், சேதிராயர் ஆகிய ஒன்பது அருளாளர்களால் பாடப்பெற்றதாகும். ஒன்பது அருளாளர்கள்- ஒன்பதாம் திருமுறை என்ற எண் பொருத்தம் கருதியும் இத்தொகுப்பு இவ்வரிசையில் வைக்கப் பெற்றிருக்கலாம்.


மேலும் காந்தாரம், புறநீர்மை, நட்டராகம், இந்தளம், பஞ்சமம் ஆகிய தேவாரப்பண்களே இத்திருமுறையிலும் கையாளப் பெற்றுள்ளது. இத்திருமுறையில் சாளரபாணி என்ற பண் மட்டும் புதிதாய் பயன்படுத்தப்பெற்றுள்ளது.


இத்தொகுப்பில் 301 பாடல்கள் அடங்;கிய 29 பதிகங்;கள் உள்ளன. திருவிசைப்பாவின் நிறைவுப் பதிகமாக அமைவது சேதிராயர் அருளிய ’சேலுலாம்’’ எனத் தொடங்கும் பதிகமாகும். இப்பதிகம், தில்லைக் கோயில் இறைவனைப் போற்றிப் பாடுவதாக உள்ளது. இப்பதிகம் திருவிசைப்பாவின் ’திருக்கடைக்காப்புப் பதிகம்‘என்ற பெருமைக்கும் உரியதுமாகும்.


இப்பதிகம் பத்துப்பாடல்களைக் கொண்டது. அந்தாதி யாப்புடையது, நான்கடிகள் கொண்ட இப்பதிகப் பாடல்கள் இறுதியடியில் ஒரு சீர் குறைந்து வருமாறு பாடப்பெற்றுள்ளன, இவ்வமைப்பு இசைப்பாடலுக்கு உரியது என்பர் இசை வல்லுநர்கள்.


இக்கட்டுரை இப்பதிகத்தை அருளிய சேதிராயர் குறித்தும், அவரின் அருட்பதிகச் சிறப்பு குறித்தும் ஆராய்வதாக உள்ளது.


சேதிராயர்


’’ஏயு மாறு எழில் சேதிபர் கோன் தில்லை


நாயனாரை நயந்துரை செய்தன‘‘


என்ற அடிகள் பதிகத்தின் பத்தாம் பாடலில் இடம்பெறுகின்றன. இங்கு சேதிராயர் ’சேதிபர்கோன்‘’என விளிக்கப் பெற்றுள்ளார். இதன் வழியாக இவர் அரசர் என்பது தௌ¤வாகின்றது.


’சேதி’’ என்பது குலப்பெயர் ஆகும்.


’’முதற்குலோத்துங்கன் (1070-1120) காலத்தில்(லும்) இராசராசசேதிராயன், இராஜேந்திர மலையமான் என்று பட்டம் தரித்தவர்கள் திருக்கோவிறலூர், கிளியூர் ஆகிய நகரங்;களைத் தலைநகராகக் கொண்டு வாழ்ந்திருக்கிறார்கள். இதனால் 11-12 ஆம் நூற்றாண்டுகளில் சேதிராயர் குறுநிலமன்னராய்ச் சோழரின் கீழ் வாழ்ந்தமை தௌ¤யப்படும். இவர்களுள் திருவிசைப்பாப் பாடியவ்ரும் ஒருவர‘‘(மு. அருணாசலம், திருவிசைப்பா திருப்பல்லண்டு பாவும் பயின்ற நிலையும், சென்னைப் பல்கலைக்கழகம், 1974, ப. 126-127) என்ற குறிப்பின்படி சேதிராயரின் மரபுவழி பெறப்படும்.


திருக்கோவலூரில் வாழ்ந்த மெய்ப்பொருள் நாயனாரும் சேதி நாட்டைச் சார்ந்தவர் என்ற பெரியபுராணக் குறிப்பு இங்;கு ஒப்புநோக்கத்தக்கது. மேற்கண்டவற்றின் வழியாகச் சேதிராயர் திருக்கோவகரலூர் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு, சோழமன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டு குறுநிலமன்னராக அரசாண்டவர் என்பது பெறப்படுகின்றது. இச்சேதிராயர் சைவ சமயம் சார்ந்து, தில்லைப்பதியை வணங்கி, திருமுறை தந்த பெருமைக்குரியவரும் ஆகின்றார்.


சேதிராயரின் பக்திச்சிறப்பு


இவர் தில்லையுள் உள்ள பெருமானைப் பதிகப் பாடல்தோறும் போற்றிப் பரவுகின்றார். அவ்வாறு போற்றிப் பரவும் தில்லைச் செய்திகளைத் தொகுத்துக் காண்கையில், பொது முடிவுகள் சிலவற்றைப் பெறமுடிகின்றது.


’’சேலுலாம் வயல் தில்லை உளீர்’’(1)


’’சேணு தற்பொலி தில்லையுளீர்’’((2)


’’சீரியல் தில்லையாய்ச் சிவனே’’((3)


’’செம்மலோர் பயில் தில்லை உளீர்’’((4)


’’செயலுற்றார் மதில் தில்லை உளீர்’’((5)


’’தில்லை வாதித்தீர் என் மடக் கொடியை’((6)


’’சிறைவண்டார் பொழில் தில்லையுளீர்’’((8)


’’தென்றலார் பொழில் தில்லையுளீர்’’(9)


’’தில்லை நாயனார்’’((10)


இவ்வாறு தில்லையைப் பாடல்தோறும் விளிப்பதன் மூலம் இவர் தில்லையின் மீது கொண்டுள்ள பக்தியை உணரமுடிகின்றது.


தில்லை நகரின் நிலப்பெருமை, நிலத்துள்ளோர் பெருமை, ஈசன் பெருமை ஆகிய மூன்று நிலைகளில் இவர் தில்லையைப் பெருமைபட கண்டுள்ளார்.


’கெண்டை மீன்கள் வாழும் வயல்கள் கொண்டது தில்லை (1), சிறகுகளை அசைத்துத் தேன் உண்ணும் வண்டுகள் நிறைந்த பூங்காக்களை உடையது தில்லை (8), தென்றல் உலாவும் சோலைகளை உடையது தில்லை(9)‘¤ ஆகிய பகுதிகள் தில்லையின் நிலவளத்தைக் கூறுவன.


’வான் முகட்டைத் தொடும் அளவிற்கு மதில்களை உடையது தில்லை(2), நுட்பமான வேலைப்பாடுகள் அமைந்த மாளிகைகளை உடையது தில்லை (5)‘ என்பன தில்லைநகரின் அமைப்பை, அழகைக் கூறுவன.


’பெருமை உடைய சான்றோர்கள் பயில்கின்ற இடம் தில்லை (4), மிக்க சிறப்புடைய தில்லை(6)‘ என்பன- தில்லையில் வாழ்பவரைக் குறிக்கும் அடிகள் ஆகும்.


’தில்லை வாதித்தீர் (6), தில்லைநாயனார்(10)‘ ஆகியன தில்லையில் வீற்றிருக்கும் எம்பெருமானைக் குறித்த பகுதிகளாகும்.


நிலங்களின் அமைப்பு, நகர அமைப்பு, நகர மாந்தர் திறம், நகரத்துள்ள சிவன் திறம் ஆகியனவற்றை ஒரு வழிப்போக்கர் முதன் முதலாகத் தில்லையை ஆர்வம் கொண்டு காணும் நிலையில் சேதிராயர் கண்டு பாடியுள்ளார்.


சேதிராயர் தில்லைப்பதியைக் காணும் விருப்பம் கொண்டு தன் நகரமான திருக்கோவ்லலூர் விட்டுக் கிளம்பியிருக்க வேண்டும். முதன்முதலாகத் திருக்கோவலூர் விட்டு தில்லைப் பதிக்கு மன்னர் குலத்தவரான சேதிராயர் எழுந்தருளிய சூழலில், அதற்கான அனுமதியை அப்பகுதி மன்னரிடம் பெற்றபின் தில்லைக்குள் நுழைந்திருக்க வேண்டும்.


அவ்வாறு நுழைந்த இவர் அரசர் என்பதால் தில்லை நகர அமைப்பை, மாந்தர் நிலையைக் கண்டு வியந்திருக்க வேண்டும். அதன் வெளிப்பாடுதான் இப்பதிகம் என்பது மேற்கண்ட தில்லை வருணனைகள் வாயிலாக வெளிப்படுகின்றது.


பாடலின் கூற்று


இப்பத்துப்பாடல்களும் செவிலி கூறுவனவாக அருளப்பெற்றுள்ளன. அகப்பாடல் மரபில் தலைவியின் காதல் வருத்தம் கண்ட தோழி -செவிலிக்கும், செவிலி -நற்றாய்க்கும் தலைவியின் காதலை மொழிவது அறத்தொடு நிற்றல் என்னும் துறையாக கொள்ளப்படுகின்றது. அத்துறையில் இப்பாடல்கள் பாடப்பெற்றுள்ளன.


தோழி செவிலிக்கும், செவிலி நற்றாய்க்கும் அறத்தொடு நிற்கும்


இம்முறை இப்பதிகத்துள் சற்று மாறுப்படுத்தப் பட்டுள்ளது.


தலைவியின் வருத்தத்தைக் கண்ட செவிலி தானாக முயன்று -அவள்


காதலையும், அவளின் காதலனையும் அறிந்துகொள்கிறாள். அறிந்த அவள்


நற்றாயிடம் சென்று அறத்தொடு நிற்காமல், காதலைத் தந்த தலைவனிடமே சென்று


திருமணம் செய்து கொள்ளக் கூறி வரைவு (திருமணம்) கடாவுகிறாள்.


வரைவு கடாதல் என்னும் தோழியின் செயலை இங்குச் செவிலித்தாய் செய்கிறாள். நற்றாயிடம் அறத்தொடு நிற்க வேண்டிய செவிலித் தாய், அவ்வாறு நிற்காமல் காதலனிடம் சென்று கூறுவதாக -இப்பதிகத்துள் மாற்றமடையச் செய்திருப்பதன் நோக்கம் என்ன? என்று வினா எழுப்பினால்க்ஷ ’சிவனே உயிர்களுக்கு நற்றாய் போன்றவன் அவனே உயிர்களை ஈடேற்றுவான்‘ என்ற பதில் கிட்டும்.


எனவே தலைவனாகவும், நற்றாயாகவும் -இங்;கு உயிர்களுக்கும், ஆன்மாக்களுக்குத் தில்லைச் சிவன் விளங்கும் காரணத்தால் சேதிராயாரால் படைக்கப்பெற்ற செவிலி- இறைவனான தலைவனிடம், நற்றாயிடம் தன் மகளின் (ஆன்மாவின் ) குறையை நேர்கிறாள். சேதிராயர் செவிலியாக விளங்கி இங்கு உயிர்களை உய்விக்கும் வண்ணமாக இப்பதிகம் பாடப்பெற்றுள்ளது என்பது கவனிக்கத்தகது.


தலைவன், நற்றாய்- தில்லைச்சிவன்


செவிலி - சேதிராயர்


தலைவி - உலகஉயிர்கள் (ஆன்மா)


இவ்வாறு அகத்துறையில் இப்பதிகம் அமைந்து சிறக்கின்றது.


தலைவியின் வருத்தம்


’’தலைவி காதல் மயக்கம் பெற்றள்ளாள்(1), நாணம் உற்றனள்(2), அழுகிறாள் (3), விம்மி விம்மியே வெய்து உயிர்த்து ஆளெனா உம்மையே நினைந்து ஏத்துகிறாள் (4), ஒன்றும் ஆகிலள் (4), அயர்வுற்றாள்(5), அஞ்சலி கூப்பினாள் (5), அந்தோ என்னை உய்யச் செய்ய கொன்றை மாலை தந்து அருள்வாய் (5), மையலுற்றாள்(6), கிளியோடு பேசுவாள்(6), ’என்று முடியும் நீர் செய்த மயக்கம்‘ என அரற்றுவாள் (7), என்னை வாதை செய்யேல் (8), உம்பொருட்டால் ஒன்றும் ஆகிலன் (9) ‘‘ ஆகிய பகுதிகள் தலைவியின் வருத்தம் கூறும் பகுதிகளாக இப்பதிகத்தில் விளங்குகின்றன.


இப்பகுதிகள் தலைவிக்கு உரியன போல் தோன்றிடினும் ஒவ்வொரு உயிரும் ஆண்டவனை அடைய- படும் துயரங்கள் இவைஆகும். விம்மி விம்மி அழுதல், அஞ்சலி செய்தல், மயக்கம் பெறல் ஆகியன ஆன்மாவிற்கே உரியன. இதன் மூலம் ஆன்மாவிற்கான குறியீடாக இங்;கு தலைவி காட்டப்பெற்றுள்ளாள் என்பது தௌ¤வாகின்றது.


அகத்துள் புறம்.


அகச்சுவைப்பாடலான இப்பதிகத்துள் ஆண்டவனின் புறச் செயல்கள் காட்டப்பெற்றுள்ளன. இதன் மூலம் அகமும் புறமும் நிறைந்த அழகு மிகு பாக்களாக இப்பதிகப்பாடல்கள் விளங்;குகின்றன. ஆண்டவனின் வீரச் செயல்கள் பின்வருமாறு.


1) ’’வேலையார்விடம் உண்டுகந்தீர் (1)


-(ஆலகாலவிடம் அருந்துதல்)


2) மால்கரி ஈருரித்தெழு போர்வையினீர் (3)


-(யானையின் தோலைப் போர்த்தல்)


3) சேதித்தீர் சிரம் நான்முகனை (6)


- (பிரம்மாவின் தலை ஒன்றைக் கொய்தல்)


4) பகைத்தார் புரம் இடிய செஞ்சிலைக் கால் வளைத்தீர் (7)


- (திரிபுரம் அழிக்க மேருவை வில்லாக்கி


நாணேற்றல்)


5) பன்றிப்பின் ஏசிய மறவனே (6)


-(அர்ச்சுனனுக்குப் பாசுபதமருள பன்றியின்பின்


ஏகுதல்)


6) அருக்கனைப் பல்லிறுத்து (9)


-சூரியனின் பல்லை அறுத்தல்


7) ஆனையைக் கொன்று (9)


-தாருகவன முனிவர்களின் யானையைக் கொல்லல்.


8) காலனைக் கோளிழைத்தீர் (9)


-மார்க்கண்டேயனுக்காக யமனை உதைத்தல்.


ஆகிய சிவபொருமானின் அட்ட வீரட்ட செயல்களும் இங்கு எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன. அகப்பாடலுள் புறச்செய்திகள் கலந்து வருவதிலும் ஓர் அழகு உள்ளது என்பதை இப்பாடல்கள் விளக்குகின்றன.


சிவபெருமானின் திருநாமங்கள்


தில்லைப்பதியில் விளங்கும் பெருமானை அழைத்த சேதிராயர், பொதுவாகவும் அவனது திருநாமங்;களைப் பதிகப் பாடல்களில் தந்துள்ளார்.


மாதோர் கூறன் (6), வண்டார் கொன்றை மார்பன் (6), அறவன் (8),மறவன்(8) ஆகிய பெயர்கள் சேதிராயரால் சிவபெருமானுக்குத் தரப்பெற்ற பெயர்களாகும். இவற்றைத் தலைவி கூறுவதாக சேதிராயர் படைத்துள்ளார்.


இவ்வாறு இப்பதிகம் அகத்துள் புறத்தையும், அகத்துள் பக்தியையும் கலந்து தந்து சிறப்பதாய் உள்ளது. மேலும் இப்பதிகத்தின்வழி இதனை அருளிய சேதிராயர் காதலாகி, கசிந்து கண்ணீர் மல்கிச் சிவனிடம் பக்தி செலுத்தும் அன்பர் என்பதும் தௌ¤வாகின்றது.


அவரின் ஓர் அருட்பாடலுடன் இக்கட்டுரை நிறைவு செய்வது பொருத்தமாகும்.


’’அறவனே‘ அன்று பன்றிப் பின்ஏகிய


மறவனே‘ எனை வாதைசெய் யேல்எனும்


சிறைவண் டார்பொழில் தில்லையு ளீர் எனும்


பிறைகு லாம்நுதற் பெய்வளையே’’(பா-9)
நன்றி :
மாயத்தேவர் 

......

கூற்றுவநாயனார்

கூற்றுவநாயனார் களந்தை என்னும் பதியிலே கூற்றுவர் என்னும் குறுநில மன்னர் ஒருவர் இருந்தார். அவர்சிவபெருமானது திருநாமத்தினை நாடோறும் ஓதியும் சிவனடியார் பாதம் பணிந்தும் ஒழுகினார்.அவ்வொழுக்கத்தின் வலிமையாலே நால்வகைச் சேனையும் சிறக்கப் பெற்று மாற்றார்க்குக்கூற்றுவன் போல விளங்கினார். தம் தோள்வலிமையாலே நால்வகைச் சேனையும் சிறக்கப்பெற்றுமாற்றார்க்குக் கூற்றுவன் போல விளங்கினார். தம் தோள் வல்லாமையால் பல போர்களிலும்பல அரசர்களையும் வென்று அவர்களது வளநாடுகளையெல்லாம் கவர்ந்தார். மணிமுடி ஒன்றொழியஅரசர் திருவெல்லாமுடையாராய் விளங்கினார்.


மணிமுடிசூட்டிக் கொடுக்கும்படி அதனைச் சூட்டும் உரிமையுடைய தில்லைவாழந்தணர்களைக் கேட்டார். அவர் சோழர் குலமுதல்வர்களுக்கு அன்றி முடி சூட்டமாட்டோம் என்று மறுத்துத் தம்மில் ஒரு குடியை மணிமுடியைக் காவல் செய்யும் படி வைத்து, இவராணைக்கு அஞ்சி சேர நாட்டிற்குச்சென்றுவிட்டனர்.


அதுகண்ட கூற்றனார் மனம் தளர்ந்து “முடியாக உமது பாதம் பெற வேண்டும்” என்று ஆடவல்லானைப் பரவி,அந்நினைவுடன்துயின்றார். அன்றிரவு மன்றிலாடும் பெருங்கூத்தர் எழுந்தருளி, தமது திருவடிகளையே முடியாக அவருக்குச் சூட்டியருள, அவற்றைத் தாங்கி அவர் உலகினைத் தனியாட்சி புரிந்தனர். இறைவர்கோயிலெல்லாம் உலகுவாழப்பூசை புரிவித்தனர். இவ்வாறு உம்பர் மகிழ நல் அரசாட்சிபுரிந்திருந்து உமையொருபாகர் திருவடி சேர்ந்தனர்.
thanks to http://kallarperavai.webs.com/apps/blog/entries/show/1996803-kootruva-nayanaar
[2]
சோழநாட்டை அரசாண்ட களப்பிர அரசர்களில் கூற்றுவனாரும் ஒருவர். இவரைக் கூற்றனார் என்றும்
கூற்றுவநாயனார் என்றும் கூறுவர். இவருடைய வரலாற்றைப் பெரிய புராணத்தில் அறிகிறோம்.


களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பழைய சோழ அரசர் பரம்பரையார் களப்பாளருக்கு கீழடங்கி இருந்தார்கள்.


அவர்களுடைய முன்னோரான சோழர் அணிந்திருந்த மணிமுடி தில்லை வாழ் அந்தணர்களிடத்தில் இருந்தது. 'முடி


ஒன்று ஒழிய அரசர் திருவெல்லாம்' உடையாராக இருந்த கூற்றுவ நாயனார் (இவரும் ஒரு களப்பாள அரசரே!)


சோழ அரசரின் முடியைத் தரித்து, அரசாளவேண்டும் என்று விரும்பினார். அவர் சோழ அரசருடைய முடியை


வைத்திருந்த தில்லைவாழ் அந்தணர்களை அணுகி அந்த முடியைக் கொண்டு தனக்கு முடிசூட்டும் படி கேட்டார்.


அவர்கள், 'சோழ அரசர் குடியில் பிறந்தவர்களுக்கு அல்லாமல் மற்றவர்களுக்கு முடிசூட்ட மாட்டோம்' என்று


சொல்லி, சோழர் முடியைத் தம்மில் ஒரு குடும்பத்தாரிடம் ஒப்படைத்துவிட்டு மற்றவர்கள் எல்லோரும்


சேரநாட்டுக்குப் போய்விட்டார்கள்.


பெரிய புராணம் கூற்றுவநாயனார் புராணத்தில் இப்படி வருகிறது.


மல்லல் ஞாலம் புரக்கின்றார் மணிமா மவுலி புனைவதற்கு


தில்லை வாழந் தணர்தம்மை வேண்ட அவரும் 'செம்பியர்தம்


தொல்லை நீடும் குலமுதலோர்க் கன்றிக்கட்டோம் முடி' என்று


நல்கா ராகிச் சேரலந்தன் மலைநா டனைய நண்ணுவார்
ஒருமை உரிமை தில்லைவாழந் தணர்கள், தம்மில் ஒருகுடியைப்


பெருமை முடியை அருமைபுரிக் காவல் கொள்ளும் படி இருத்தி


இருமை மரபுத் தூயவர்தாம் சேரர் நாட்டில் எய்தியபின்


வரும் ஐ யுறவால் மனந்தளர்ந்து மன்றுள் ஆடும் கழல்பணிவார்


---------------------------------------------------------------------------------
thanks to http://www.treasurehouseofagathiyar.net/21700/21719.htm
[3]
செங்கற்பட்டு மாவட்டம், செங்கற்பட்டு வட்டத்தில் உள்ள பொன்விளைந்த களத்தூரே, களந்தை என்று ஒரு சாராரும், தஞ்சாவூர் மாவட்டம் திருத்தருப்பூண்டி வட்டத்திலுள்ள களப்பாழ் (களப்பாள்) என்ற ஊரே களந்தை என்று வேறு ஒரு சாராரும், கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சிவட்டத்திலுள்ள பெரிய களந்தை என்ற ஊரே களந்தை என்று மற்றொரு சாராரும் கூறிவருகின்றனர். இவைகளின் வன்மை மென்மைகளை ஆராய்வாம்.
பொன்விளைந்த களத்தூர், களந்தை என்று மரூஉ மொழியாக வழங்கப்பெறும். இவ்வழக்கைத் தொண்டைமண்டல சதகத்தால் அறியலாம். ஆனால், இவ்வூரில் உள்ள கோயிலின் பெயர், சயங் கொண்ட சோழ மண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்துக் களத்தூர் பெருந்திருக்கோயில் என அவ்வூர்க் கல்வெட்டுக்கள் உணர்த்து கின்றன. 1 ஆதலால் இக்களத்தூர் திருவிசைப்பாப் பெற்ற கோயில் களந்தை ஆகாது.


கல்வெட்டு:


நாகை மாவட்டம் திருத்தருப்பூண்டி வட்டத்தில் உள்ள களப்பாழ் (களப்பாள்) என்ற ஊரில், அழகிய நாதசுவாமி கோயில், கயிலாசநாதர்கோயில், ஆனைகாத்த பெருமாள்கோயில் என்னும் மூன்று திருக்கோயில்கள் இருக்கின்றன. அவைகளுள் அழகிய நாதசுவாமி கோயிலில் உள்ள பாண்டியன் திரிபுவனச் சக்கரவர்த்தி குலசேகர தேவரின் 23ஆம் ஆண்டு 204ஆம் நாளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, அவ்வூர் இறைவனை, களப்பாள் உடையார் திருஆதித் தேச்சரமுடையார் என்று குறிப்பிடுகிறது. களப்பாள், களந்தை என்று மருவி வருதலும் உண்டு. ஆதலில் இந்தக் களப்பாள் ஆதித்தேச்சரமே கருவூர்த்தேவர் திருவிசைப்பாப் பெற்ற தலமாகும். `அந்தணர் அழலோம்பு அலைபுனல் களந்தை\' எனவும், \"குழையராய் வந்தென் குடிமுழு தாளுங் குழகரே ஒழுகுநீர்க் கங்கை அழகரே யாகில் அவரிடங் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே\" (தி.9 ப.9 பா.4) எனவும் திருக்களந்தை யாதித்தேச்சரத் திருவிசைப்பா அடிகள், இக்களப்பாள், அழலோம்பும் அந்தணர்கள் வாழுமிடம் என்பதையும், இறைவரின் திருப்பெயர் அழகர் (அழகியநாதசுவாமி) என்பதையும் உணர்த்துகின்றன. கயிலாசநாதர்கோயில், ஆனைகாத்த பெருமாள் கோயில் இவைகளில் உள்ள கல்வெட்டுக்கள் இராஜேந்திர சோழவள நாட்டு, புறங்கரம்பை நாட்டு அகரம் முடிவழங்குசோழபுரம் என்று இவ்வூரைக் குறிப்பிடுகின்றன. ஆதலின் அந்தணர்கள் இவ்வூரில் இருந்து வருகின்றனர் என்பதைக் கல்வெட்டுக்களும் தெரிவிக் கின்றன. இறைவர்க்கு வழங்கிவரும் அழகியநாதசுவாமி என்பதற்கு ஈண்டுக் குறித்துள்ள திருவிசைப்பா அடிகளிலும் சான்று இருக்கின்றது. `அந்தணீர்க் களந்தை\' `அலைபுனற் களந்தை\' எனத் திருவிசைப் பாவில் வருவதால், இக் களந்தை நீர்வளம் பொருந்தியது என்று பெறப் படுகின்றது. அதற்கு ஏற்ப இவ்வூர் முள்ளியாற்றுப் பாய்ச்சல் உடைய தால் நீர்வளத்துக்குக் குறைவேயில்லை. ஆதலின் இக் களப்பாள் என்னும் ஊரே கருவூர்த் தேவரின் திருவிசைப்பாப் பெற்ற தலமாகும். பெரிய களந்தை ஆதிபுரீஸ்வரர் திருக்கோயிலில் பதினான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. 1 அவைகளுள் ஒன்று நீங்கலாக (எண் 169) ஏனையவைகள் அனைத்திலும் இறைவன் திருப்பெயர் \"ஆதி புராணீஸ்வரம் உடைய நாயனார்\" என்றே குறிக்கப்பெற்றிருக்கிறது. அந்த 169 எண்ணுள்ள கல்வெட்டில் ஆதித்தேச்சுரம் உடையார் என்று குறிக்கப்பட்டிருக் கிறது. இக் கல்வெட்டு வேறு எங்கிருந்தோ கொண்டு வந்து வைக்கப் பட்டதாகும். கல்வெட்டுத்துறையினரும் இக்கல்லை தொடர்பற்ற கல் எனக் குறித்துள்ளனர். ஆதலின் இப்பெரிய களந்தை திருவிசைப்பாப் பெற்றதன்று. இறைவரின் திருப்பெயர்: ஆதித்தேச்சுவரர்; அழகியநாத சுவாமி. இறைவியாரின் திருப்பெயர்: பிரபாநாயகி. வழிபாடாற்றியவர்: ஆதித்தசோழன், கூற்றுவநாயனார். இவ்வூரின் சிறப்பு: கூற்றுவநாயனாரது அவதார ஸ்தலம் இக்களப்பாள் ஆகும். \"கோதை நெடுவேற் களப்பாளனாகிய கூற்றுவனே\" என்பது திருத்தொண்டர் திருவந்தாதி. கல்வெட்டு வரலாறு: இவ்வூர்க் கோயில்களில் 12 கல்வெட்டுக்கள் (1 See the Annual Reports on South Indian Epigraphy for the years 1902 Nos.656-663, -1925 Nos. 334-337 and S.I.I.Vol. VIII Nos. 261-268. ) இருக்கின்றன. இவைகளுள் அழகியநாத சுவாமி கோயிலின் இருகல்வெட்டுக்களின் மூலங்கள், தென் இந்தியக் கல்வெட்டுத் தொகுதி எட்டில் வெளி வந்திருக்கின்றன. அவைகளுள் ஒன்றினைக் குறிப்பிடுகின்றேன். \"ஸ்வஸ்திஷ்ரீ கோமாறு பன்மர் திரிபுவனச் சக்ரவர்த்திகள் சிறிகுலசேகர தேவற்கு யாண்டு 23 24 ள் பங்குனி மீ களப்பாள் உடையார் திருவாதித்தீசுரமுடையாற்கு வரகூருடையார் பிள்ளை காடுவெட்டியார் மகனார் சொக்க நாயனார் கட்டின சந்தி ஒன்று.\" இவற்றால் களப்பாள் என்பது ஊரின்பெயர் என்பதும், ஆதித் தேச்சரம் என்பது கோயிலின் பெயர் என்பதும் புலப் படுகின்றன. thanks t o
http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=279


நன்றி:
மாயதேவர்


.....

திருமங்கை மன்னன் நீலன்

STORY
""! உமது மகள் குமுதவல்லி பற்றி நகர் முழுவதும் பிரமித்துப்போய் பேசுவது பற்றிக் கேள்விப்பட்டேன். இன்று நான் நேரிலேயே அவளது அழகைக் கண்டு மயங்கிப் போனேன். சுற்றி வளைத்துப் பேச விரும்ப வில்லை. அவளை நான் மணக்க விரும்புகிறேன்.''

வெள்ளைக் குதிரைமீது மன்மதன்போல உலா வந்து நின்ற திருமங்கை மன்னன் நீலன் அவ்வாறு கேட்டதும், குமுதவல்லியின் பெற்றோர் அப்படியே திகைத்துப் போய் நின்றுவிட்டனர். இந்தத் தேனினும் இனிய வார்த்தைகளுக் காகத்தானே அந்தத் தம்பதியர் இதுகாறும் தவமிருந்தனர். சோழ வேந்தனுக்குப் பல போர்க்களங்களில் மாபெரும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தவன் இந்த நீலன். வீரத்தால் வேந்தனின் நன் மதிப்பைப் பெற்ற நீலன், தமது கல்வி ஆற்றலால் அரசனின் நெஞ்சில் நிலை யான இடத்தையும் பெற்றான்.
நீலனைப் பெருமைப்படுத்தும் பொருட்டு சோழ வேந்தன் அவனைத் திருவாலிநாட்டிற்க்கு மன்னனாக்கி திருமங்கை என்னும் ஊரை தலைநகராக தந்தான். படைக்குத் தளபதியாக இருந்து பகைவர்க்குக் காலனாக விளங்கிய நீலனுக்கு "பரகாலன்' எனும் வீரப்பட்டத் தையும் அளித்தான்.
இதுநாள் வரை பக்தியில் திளைத்துப் பரமனை மனதில் நினைத்துக் கொண்டிருந்த நீலன், மன்னன் என்ற பதவியைப் பெற்ற பின்பு பரமனை மறந்து, பொன்னாசையும் பெண்ணாசையும் மண்ணாசையும் கொண்டான். ஆலயம் சென்று மாதவனைத் தொழும் எண்ணம் போய் அந்தப்புரமே கதியென்று கிடந்தான்.


ஊர்வசியோ மேனகையோ என்று ஊரார் வாயூறச் சொல்லிக் கொண்டிருந்த வர்ணனை, திருமங்கை மன்னனை சில நாட்களாகவே துயில விடாமல் செய்து, அவனைப் புரவிமீது ஏறி இன்று குமுதவல்லியின் வீட்டுக்கே கொண்டு வந்துவிட்டது.


"நாங்கள் மிகவும் கொடுத்து வைத்திருக்கிறோம். பூர்வ புண்ணியம் செய்ததாலேயே இத்தகைய பேறு எங்களுக்கு வாய்த்தது!'' என்று கூறியபடியே குமுதவல்லியின் பெற்றோர் மகளை அழைத்து வந்தனர்.


""தந்தையே! நான் திருநாங்கூர் பெருமானின் திருவடிகளைத் தஞ்சம் என்று பற்றியுள்ளேன். ஒரு வைணவ அடியாரை மணக்க வேண்டும் என்று மனதிற்குள் முடிவு செய்துள்ளேன். ஆகையால் என்னை மணக்க விரும்பும் இவரை திருமங்கை மன்னனாகப் பார்ப்பதைவிட ஒரு திருமால் அடிய வராகப் பார்ப்பதிலேதான் பேரின்பம் கொள்வேன்.''


குமுதவல்லி என்ன கூற விரும்புகிறாள் என்று குழம்பிய விழிகளுடன் அப்போது அனைவரும் ஏறிட்டுப் பார்த்தனர்.
""ஆம் தந்தையே! திருமங்கை மன்னர் முதலில் போர் வெறியை மறக்க வேண்டும். அடுத்தபடியாக வேற்றுப் பெண்ணை மனதிலும் நினையாது, பரமனின் சேவடி மறவா சிந்தனையுடைய திருத் தொண்டராக மாறினால் இவரை நான் மணக்கச் சம்மதிக்கிறேன்'' என்று கூறினாள் குமுதவல்லி.


அவளுடைய நிபந்தனை மனதை உறுத்திய போதிலும், அவளது ரூபலாவண்யத்தில் லயித்துப் போயிருந்த திருமங்கை மன்னன் அவளது விருப்பத்துக்கு மறுப்பு கூறவில்லை. அவளது நிபந்தனைக்குக் கட்டுப்பட்டான்.
அப்போதே மன்னன் அங்கிருந்து விடை பெற்று திருநறையூர் வந்தான். அங்கு கோவில் கொண்டுள்ள நம்பியை நாவால் துதித்து மேனியால் தண்டம் சமர்ப்பித்துப் பணிந்து போற்றினான்.
நம்பியின் திருவருளால் திருமங்கை மன்னன் பரம வைணவரானார். ""அன்பரே! திருமங்கை மன்னர் என்று புகழப்படும் நீ, இனிமேல் திருமங்கை ஆழ்வார் என்று அழைக்கப்படுவாய். எமது திருப்பதிகள் தோறும் சென்று பாடி எம்மை மகிழ்விப்பீராக'' என்று எம்பெருமான் சங்கு சக்கரதாரியாகக் காட்சி தந்து அருள்பாலித்து மறைந்தார்.
திருமங்கை ஆழ்வாராகத் திருமேனியில் திருமண் பிரகாசிக்க, துளசிமணி மாலைகளும் தாம்பிரமணி மாலைகளும் அணிந்து பரம ஸ்ரீவைணவ புருஷராக மாறிய மன்னர், அக்கணமே அமைச்சர் புடைசூழ மீண்டும் குமுதவல்லியின் இல்லம் நோக்கிப் புறப்பட்டார்.


குமுதவல்லியின் இல்லத்தை அவர்கள் அடைந்தபோது, திருமங்கை மன்னரின் தோற்றம் கண்டு பக்திப் பரவசம் கொண்டு, அனைவரும் அவரது பாதங்களைத் தொழுது பணிந் தனர்.


அப்போது குமுதவல்லி மிகுந்த பணிவுடன் மன்னர் முன்பு போய் நின்றாள்.
""சுவாமி! இந்த அடியாளைத் தாங்கள் பொறுத்தருள வேண்டும். நான் கேட்டுக் கொண்டதற்கிணங்கி தாங்கள் வைணவப் பெரியாராக மாறியது கண்டு பரமானந்தம் அடைந்தேன். அடியவளுக்கு மற்றுமொரு விண்ணப்பம் உள்ளது.


தாங்கள் ஓராண்டு காலம் நாள்தோறும் ஆயிரத்தெட்டு ஸ்ரீவைணவ அடியார்களுக்கு அமுது செய்வித்து, அவர்களுடைய ஸ்ரீபாத தீர்த்தமும் தளிகைப் பிரசாதமும் அங்கீகரித்து நிறைவேற்ற வேண்டும். எனது இந்த நோன்பிற்கு இணங்குகிறேன் என்று பிரதிக்ஞை செய்து கொடுத்தால், தங்களை விவாகம் செய்து கொள்ள இக்கணமே ஒப்புதல் அளிக்கிறேன்'' என்றாள் குமுதவல்லி.


குமுதவல்லி அவ்வாறு கூறியபோது திருமங்கை ஆழ்வார் யாதொரு மறுப்பும் கூறாது ஏற்றுக் கொண்டார். தாம் அவளது விருப்பம்போலவே திருத்தொண்டர்களுக்குத் தினமும் அமுது படைப் பேன் என்று சபதம் எடுத்துக் கொண்டார். குமுத வல்லியும் ஆழ்வாரை மணக்கச் சம்மதித்தாள்.
சோழ சாம்ராஜ்யத்திலுள்ள அனைத்து சிற்றரசர் களுக்கும் மண ஓலை அனுப்பப்பட்டது. மாமுனிவர் களுக்கும் மகான்களுக்கும் அழைப்புகள் அனுப்பப் பட்டன.


திருமங்கை ஆழ்வார் குமுதவல்லியின் கரம் பற்றியதும், ஆயிரத்தெட்டு அடியார்களுக்கு அனுதினமும் சமாராதனை ஆரம்பமானது.


அவருடைய அரண்மனையில் பெரும் பந்தல் போட்டு, மடப்பள்ளி தனியாகக் கட்டி, நூற்றுக் கணக்கான பரிசாரகர்கள் இதற்காகவே அமர்த்தப் பட்டனர்.
திருமங்கை ஆழ்வாரின் அரண்மனையில் பரம திருப்தியுடன் போஜனம் முடித்துச் செல்லும் அன்பர்கள், மன்னனையும் மகாராணியையும் வாழ்த்திவிட்டுச் சென்றனர்.


அடியவர்களின் வாழ்த்தொலியானது திருமங்கை ஆழ்வாரின் மனதில் இனம் புரியாத ஒரு மலர்ச்சி யினை ஏற்படுத்தியது. அந்த உணர்வானது பரந்தாம னின் திருவடிகளிலே ஒரு நிலையான பக்திப் பேரலையை உருவாக்கியது.
பெண்ணாசையில் மயங்கித் திரிந்த காலத்தில் குமுதவல்லியின் பேரழகைப் பற்றி நாட்டு மக்கள் அனைவரும் சொல்லக்கேட்டு, அவளை எப்படியும் மணந்து இரவுகள் பாராது சுகானுபவத்தில் திளைக்க வேண்டும் என்று நினைத்திருந்த திருமங்கை மன்னன் திருமங்கை ஆழ்வாரானபின்- அவளை மணந்தபின் முழுக்க முழுக்க அடியவர் சேவையில் மூழ்கி தேக சுகம் பற்றிய சிந்தனை ஏதுமின்றிப் போனார்.
அவருக்குள் முன்பிருந்த சிற்றின்ப உணர்வு அவரைவிட்டு விலகி, அவரது மனம் முழுவதும் பேரின்பம் பலமாகப் பற்றிக் கொண்டது.
அதுபோலவே எப்போதும் போர்க்களம் என்று போரில் தினமும் ஆயிரம் வீரர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்த திருமங்கை மன்னர், இப்போது தினமும் ஆயிரம் அடியார்கள் அன்ன தானப் பந்தியில் இருக்க, அவர்களுக்குச் சேவை புரிவதிலேயே சிந்தனையைச் செலவழித்துக் கொண்டிருந்தார்.
அரண்மனை கஜானாவிலிருந்த பணமனைத்தும் அன்னதானத்துக்குச் செலவாயிற்று. சோழவேந்த னுக்கு கப்பம்கூடக் கட்ட முடியாமல் போயிற்று. சோழ மன்னனோ கப்பம் வராத கோபத்தில் திருமங்கை ஆழ்வார்மீது பெருஞ்சினம் கொண்டான்.
அமைச்சர்களை அனுப்பி வசூல் செய்துவர சோழ மன்னன் உத்தரவிட, அவர்கள் திருமங்கை ஆழ்வார் நாட்டிற்கு வந்தனர்.


"திருமங்கை மன்னன் குமுதவல்லி எனும் ஒரு பெண்ணுக்காக அரண்மனைப் பணம் முழுவதையும் செலவழித்து, தினமும் 1008 அடியார்களுக்கு அன்னதானம் செய்து வருகிறான்' என்று கூறக் கேட்டு அவர்கள் வெறுப்படைந்தனர்.


ஊரார் சொல்லியதைப்போலவே, பக்தர்கள் மார்பில் சந்தனமும் கையில் விசிறியும் கொண்டு ஆயிரக்கணக்கில் அன்னதானம் உண்டு செல்வதைக் கண்ட அமைச்சர்கள், மன்னரிடம் சென்று கப்பப் பணம் பற்றிக் கேட்டனர். மன்னர் அப்பணத்தை விரைவில் செலுத்திவிடுவதாகக் கூறி அனுப்பி வைத்தார். அந்த அமைச்சர்களும் சோழ மன்னனிடம் சென்று திருமங்கையாழ்வாரைச் சந்தித்த விவரத்தைத் தெரிவித்தனர்.
ஆனால் திருமங்கை ஆழ்வார் சொன்னபடி கப்பப் பணத்தைப் பலமுறை கேட்டும் செலுத்த வில்லை. அவரது எண்ணமெல்லாம் அடியார்க்கு அமுது படைப்பதிலேயே இருந்து வந்தது.
பொய்யான தவணைக்கு எத்தனை முறைதான் பொறுப்பான் சோழ மன்னன்? திருமங்கை மன்னனைக் குறி வைத்து ஒரு கோபப் புயல் புறப்பட்டு வந்தது...பொய்யாகத் தவணை சொல்லி அனுப்பி வைத்த திருமங்கை ஆழ்வார் மீது கோபம் கொண்ட சோழ மன்னன், ""இனியும் பொறுக்க முடியாது. அந்தத் திருமங்கை மன்னனை இப்போதே சென்று சங்கிலியால் கட்டி இழுத்து வந்து என் முன்னால் நிறுத்துங்கள்!'' என்று ஆணை எழுதி அனுப்பினான்
சோழ மன்னன் அவ்வாறு கட்டளையிட்ட பின் அமைச்சர்கள் என்ன செய்ய முடியும்! காவலர் புடைசூழ திருமங்கை மன்னர் முன் போய் நின்றனர்.
அவர்கள் நீட்டிய சோழ மன்னனின் ஆணையை வாசித்துப் பார்த்த திருமங்கை மன்னர் அதை வீசியெறிந்தார்.
""எத்தனை ஆணவம் இருந்தால் உங்கள் சோழ மன்னர் களம் பல கண்ட என்னை சிறைப் பிடித்து வரச் சொல்லுவார்? அடியவருக்கு அடிபணியும் இந்த திருமங்கை மன்னன் ஒரு போதும் அரசருக்குமுன் முடி பணிய மாட்டான். போரில் சந்திப்போம்'' என்று கர்ஜித்துச் சொல்லி அமைச்சர்களை அனுப்பினார்.
திருமங்கை மன்னனின் சினம் கொண்ட வார்த்தைகளையும் எச்சரிக்கையையும் கேட்டு வெகுண்டெழுந்தான் சோழன்.
உடனே போருக்கான ஆயத்தங்களை முடுக்கி விட்டான். உறையூரில் இருந்து சதுரங்க சேனைகள் புறப்பட்டன. சோழ மன்னனும் படையோடு புறப்பட்டுச் சென்றான்.
திருமங்கை மன்னரும் போர்க்கோலம் பூண்டு தன்னுடைய ஆடன்மா குதிரை மீதமர்ந்து வீரர்கள் புடைசூழ போர்க்களம் புகுந்தார்.
அத்தனை மூர்க்கமான போரை எதிர் பார்க்காமல் சோழ மன்னனும் திணறிப் போனான். அப்போது திருமங்கை மன்னர் சோழ மன்னன் முன்பாகப் போய் நின்று, ""சோழ மன்னா! கப்பம் கேட்டு என்னைச் சிறை செய்து இழுத்து வர ஆணையிட்டாயே... இப்போது சிறையிழுத் துச் செல்லப்பட வேண்டியவன் நீயா? நானா?'' என்று கோபம் கொண்டு கேட்டார்
 ""திருமங்கை மன்னனே! நான்தான் உன்னை திருமங்கை நாட்டுக்கு மன்னனாக்கினேன். அந்த நன்றியை மறந்து ராஜ துரோகியாக என் முன்னே நிற்கிறாய். நான் உனக்கு மன்னர் பதவியை அன்று கொடுக்காதிருந்தால், நீ அன்னக்காவடியாகத் திரிந்து கொண்டிருப்பாய். அதனை நினைவில் வைத்துக்கொள். நன்றி மறந்தவனே, செய்நன்றி கொன்றவனே! நீ ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்து ஒன்றும் ஆகப் போவதில்லை!'' என்று சோழ மன்னன் கூறினான்.


அதனைக் கேட்ட திருமங்கை மன்னரின் மனம் சலனப்பட்டது. செய்நன்றி என்ற வார்த்தை அவரது மனதுக்குள் கூர்வாளாய்க் குத்தியது.


திருமங்கையாழ்வார் சோழ மன்னனிடம், ""அரசே! இந்த நீலன் நன்றி கொன்றவர் மரபில் பிறந்தவன் அல்லன். என் வாளை உறையில் போட்டுவிட்டேன். உங்கள் எண்ணப்படி என்னைச் சிறை எடுத்துக் கொள்ளுங்கள்'' என்றார்.


அப்போது ஆழ்வாரின் மனதை அரசனின் வார்த்தைகள் எப்படிச் சலனப்படுத்தியதோ, அதேபோல் திருமங்கை மன்னரின் சொற்கள் சோழ மன்னனுக்குள்ளும் ஒரு பெருமாற்றத்தை ஏற்படுத்தியது.


""திருமங்கை மன்னா! உமது வீரத்துக்கு யாம் தலைவணங்குகிறோம். கப்பப் பணத்தை எப்படியும் மூன்று நாட்களுக்குள் கட்டிவிட வேண்டும். அதுவரை சோழ நாட்டுத் தேவாலயம் ஒன்றில் உம்மைச் சிறை வைப்போம்'' என்று சோழ மன்னன் கூறினான்.


அதற்கு திருமங்கையாழ்வார் மறுப்பேதும் கூறவில்லை. அவரை ஒரு பெருமாள் கோவிலுக் குள் தங்க வைத்து வெளியே காவல் இட்டனர். ஆழ்வார் பெருமாளைப் போற்றிப் பணிந்தார்.


"அடியவர்களுக்கு அமுது படைப்பதற்குத் தானே என் செல்வம் அத்தனையும் செலவழித் தேன். அது குற்றமா? அப்படியென்றால் எனக்கு நேர்ந்துள்ள பழி நீங்கும்வரை நான் அமுது செய்ய மாட்டேன்' என்று பெருமாளிடம் புலம்பியபடி தியானத்தில் லயித்து விட்டார்.


மூன்றாவது நாளன்று ஆழ்வாரின் கனவில் சங்கு சக்கரதாரியாக வரதராஜப் பெருமாள் காட்சியளிக்க, திருமங்கையாழ்வார் நெடுஞ்சாண் கிடையாகச் சேவித்தார்.


""அன்பரே! கவலை வேண்டாம். நீர் காஞ்சியம்பதிக்கு வருவீராக. திரைப்பணம் யாவும் தந்து உம் குறை போக்குவோம்'' என்று திருவாய் மலர்ந்து மறைந்தார்.


திருமங்கை ஆழ்வாரின் கனவில் பெருமாள் காட்சி தந்து மறைந்ததும், அவர்மீது மெய்யுருக பைந்தமிழ்ப் பாசுரம் பாடி போற்றிப் பணிந்தார்.


விடிந்ததும் சோழ மன்னரின் அமைச்சர்களை அழைத்து, ""அமைச்சர்களே! தாங்கள் அனைவ ரும் என்னுடன் காஞ்சியம்பதிக்கு வாருங்கள். நான் செலுத்த வேண்டிய திரைப்பணத்தை அங்கே செலுத்துகிறேன்'' என்றார்.


அதன்படியே ஆழ்வாருக்குப் பின்னால் அந்த அமைச்சர்கள் காஞ்சியம்பதி சென்றனர். காஞ்சியம்பதி சென்ற திருமங்கை ஆழ்வார் நேராக வரதராஜப் பெருமாள் சந்நிதிக்குச் சென்றார்.
""காஞ்சி வரதராஜப் பெருமாளே! என் கனவில் வந்து திரைப்பணம் தருவதாகச் சொல்லி என்னை இங்கு வர வழைத்தாயே... பொன்னிருக்கும் இடத்தைக் காட்டி என்னைக் காத்திடுவாய்...'' என்று பாமாலை பாடிப் புலம்பினார் திருமங்கை ஆழ்வார்.


ஆழ்வாரின் பாசுரம் கேட்டு பெருமாள், ""அன்பரே! கவலை வேண்டாம். அடுத்துள்ள வேதவதி தீரத்தில் பொற்குவியல் இருக்கும் இடத்தை உமது ஞானதிருஷ்டியில் காண்பீராக'' என்று திருவாய் மலர்ந்தருளி மறைந்தார்.


வரதராஜப் பெருமாளை வண்ணத் தமிழால் வாயார வாழ்த்திப் பாடியபடி, பரவசம் கொண்டவராய் அமைச்சர்களை அழைத்துக் கொண்டு வேதவதி நதி தீரம் சென்றார் திருமங்கையாழ்வார்.


தமது ஞானதிருஷ்டியால் பொன்னிருக்கும் இடத்தைக் கண்டறிந்தார். அந்த தெய்வீக அற்புதம் கண்ட மாத்திரத்தில் அனைவரும் அதிசயித்து நின்றனர்.


அமைச்சர்களும் மற்றவர்களும் திருமங்கை ஆழ்வாரின் பாதார விந்தங்களில் பணிந்து பிழை பொறுக்க வேண்டினர்.


பெருமாளின் பேரருள் பெற்ற திருமங்கை ஆழ்வாரை வரவேற்க சோழ மன்னன் உறையூர் எல்லையிலேயே நின்று வரவேற்று நமஸ்கரித்து, அரண்மனைக்கு அழைத்துச் சென்று உயர்ந்த ஆசனத்தில் எழுந்தருளச் செய்தான்.


சோழ மன்னனிடம் திரைப்பணத்தை திருமங்கையாழ்வார் கொடுத்தபோது, அதனை அவரிடமே திரும்பக் கொடுத்து, ""சுவாமி, தங்கள் பெருமையை உணராமல் தங்களை மிகுந்த சிரமத்துக்குள்ளாக்கிவிட்டேன். அடியார்க்கு அமுது அளிக்கும் பெரும் பாக்கியத்தைச் செய்து கொண்டிருந்த தங்கள்மீது போர் தொடுத்துப் பெரும் பாதகம் செய்துவிட்டேன். என்னைத் தயவு செய்து பொறுத்தருளுங்கள். இனி தாங்கள் எனக்குத் திரை செலுத்த வேண்டியதில்லை. இப்பணத்தை அடியார்க்கு அமுது படைக்க எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறினான்.


மன்னவன் கொடுத்த காணிக்கையை ஏற்றுக்கொண்ட ஆழ்வாரைத் தக்க மரியாதை களுடன் அவரது நாட்டிற்கு அனுப்பி வைத்தான் சோழ மன்னன்.


நாடு திரும்பிய ஆழ்வாரை அன்புடன் எதிர்கொண்ட மனைவி குமுதவல்லி, வரதராஜப் பெருமாளின் பேரருள் கிடைத்த செய்தியினைக் கேட்டு பேரானந்தம் கொண் டாள்.


அதன்பின்பு எப்போதும் போல் திருமங்கையாழ்வார் அடியார்க்கு அமுது செய்துவரும் பணியினைச் செய்து வந்தார். தொடர்ந்து செய்து வரும் காலத்தில் மீண்டும் தடை ஏற்பட்டது. ஆழ்வார் தமக்குச் சொந்தமான அணி ஆபரணம் யாவும் விற்று அமுது செய்து வந்தும் பணம் போதவில்லை.


கஜானாவும் காலியாகி விட்டது. பொருள் பற்றாக்குறை பற்றிய கவலை ஆழ்வாரை வாட்டி யது. யாருக்கும் தெரியாமல் செல்வந்தர்களிடம் திருடுவது என்ற முடிவுக்கு வந்தார்.
திருமண் துலங்கும் அடியார்களை மட்டும் தொடாமல் திருடுவது என்று திட்டமிட்டார். காடுகளிலும் குகைகளிலும் மறைந்து கொண்டு திருத்தொண்டு நடத்துவதற்குத் திருடும் தொழிலை திருமங்கையாழ்வார் செய்து வந்தார்.


அன்று...


ஸ்ரீமந்நாராயணனும் நாச்சியாரும் ஸ்ரீவைண வத் தம்பதியர்களாகத் திருக்கோலம் பூண்டு, சுமக்க முடியாத அளவுக்கு அணிமணி ஆபரணங்களையும் நவரத்தின மணிமாலை களையும் அணிந்துகொண்டு, திருமணக்கோலம் பூண்டவர்களாகப் பல்லக்கில் அமர்ந்து தேவர்கள் புடைசூழ, ஆழ்வார் பதுங்கியிருந்த குகை வழியே வந்து கொண்டிருந்தனர்.


குகையில் இருந்தபடியே யாவற்றையும் நோட்டம் பார்த்த திருமங்கையாழ்வார், திருமணக் கோஷ்டி வருவது கண்டு மனம் மிகவும் குதூகலித்தவராய், தமது அந்தரங்க வீரர்களுடன் கையில் வாளும் வேலும் ஏந்தி பின்னால் வந்து, ""அப்படியே நில்லுங்கள்'' என்று குரல் கொடுத்தார்.


அந்த மிரட்டும் குரல் கேட்டுப் பல்லக்கு இறக்கப்பட்டு தரையில் வைக்கப்பட்டது. அப்போது ஆழ்வார் பல்லக்கின் அருகே வந்து, ""திருமணத் தம்பதியர்களே! உங்கள் வாழ்வு வளம்பெற வேண்டுமானால் பல்லக்கில் குண்டுமணி நகைகூட இல்லாமல் அத்தனை யையும் கழற்றிக் கொடுத்துவிடுங்கள். வீண் குழப்பம் செய்தால் உங்கள் திருமண வாழ்க்கை சுவர்க்கத்தில்தான் நடக்கும்'' என்று மிரட்டினார்.


ஸ்ரீமந்நாராயணன் தன் நெஞ்சைக் கொள்ளை கொண்ட திருமங்கை ஆழ்வாரைப் பார்த்துப் புன்னகைத்து, ""நீ வைணவ பக்தனான கொள்ளைக்காரன் போலத் தெரிகிறது. எங்களை ஒன்றும் செய்துவிடாதே. அணிமணி ஆபரணங்களை அப்படியே கழற்றித் தந்து விடுகிறோம்'' என்றார்.


அதன்படியே அத்தனை அணி ஆபரணங் களையும் எல்லாரும் கழற்றி ஆழ்வாரிடம் சேர்ப்பித்தனர். ஸ்ரீமந்நாராயணனும் எல்லா வற்றையும் கழற்றிக் கொடுத்துவிட்ட போதிலும், அவரது கால் விரலில் பத்திரமாக இருக்கும் கணையாழியைப் பார்த்து விட்டார் திருமங்கை ஆழ்வார்.


""அந்தக் கணையாழியையும் கழற்றிக் கொடு'' என்று கர்ஜித்தார்.


""அதனாலென்ன, நம் கலியனுக்காக நாம் எல்லாவற்றையும் கழற்றித் தருவோம்'' என்று பெருமாள் கூறியதைக் கேட்டு ஆழ்வாருக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.


இந்த மணமகனுக்கு எப்படி நம்மை அடை யாளம் தெரிந்தது என்று ஆழ்வார் யோசித்துக் கொண்டிருந்தபோது, ""அன்பரே! இதை மட்டும் என்னால் கழற்ற முடியவில்லை. விரலோடு இறுகி விட்டது. வேண்டுமானால் நீயே கழற்றிக் கொள்'' என்றார் பெருமாள்.


உடனே திருமங்கையாழ்வார் பரமனின் கால் விரலிலிருந்த கணையாழியைப் பற்களால் கடித்துக் கழற்றினார். பக்தனின் இச்செயல் பரமனுக்குப் பரமானந்தமாக இருந்தது.


ஸ்ரீமந்நாராயணனின் திருமேனியில் அலங்கரிக்கப்பட்ட வஸ்திரத்தை எடுத்து, அதில் கொள்ளையடித்த அணி ஆபரணங்களை எல்லாம் வைத்துக் கட்டி, தமது படைவீரர்க ளிடம் அவற்றைத் தூக்கிக் கொண்டு வரும்படி ஆழ்வார் கட்டளையிட்டார்.


படைவீரன் ஒருவன் அலட்சியமாக அந்தப் பொன்மூட்டையைத் தூக்க முயன்றபோது அதை அவனால் அசைக்கக்கூட முடியவில்லை.


பெரும் மலைபோல கனம் உணர்ந்து மற்றவர் களையும் அழைக்க, பலரும் ஒன்று சேர்ந்து முயன்றும் அந்த மூட்டையை யாராலும் அசைக்க முடியவில்லை. திருமங்கையாழ்வார் அதைப் பார்த்து அதிசயித்துத் தாமும் போய்த் தூக்க முயன்றார்; முடியவில்லை.
உடனே கோபத்துடன் மணமகனாகப் பல்லக்கில் உட்கார்ந்திருக்கும் நாராயணனைப் பார்த்து, ""நீ பெரிய சித்து விளையாட்டு எல்லாம் கற்று வைத்திருப்பவன் போல் தெரிகிறது. நீ ஏதோ மந்திரம் போட்டு நான் கட்டிய மூட்டை யைக் கட்டுப்படுத்தியிருக்கிறாய். ஒழுங்காக அந்த மந்திரத்தை விலக்கி நாங்கள் இந்த மூட்டையைத் தூக்கிச் செல்லும்படி செய். இல்லையேல் உனக்கு இங்கு வழி பிறக்காது'' என்று அதட்டினார் திருமங்கையாழ்வார்.


""கலியா! ஏன் கோபப்படுகிறாய். உனக்குத் தெரியாத மந்திரமா? அல்லது மந்திரத்தை மறந்து போனாயா? சரி; வா. நான் உன் செவிகளில் மீண்டும் ஓதுகிறேன்'' என்று நாராயணன் கூறினார்.


திருமங்கையாழ்வார் நாராயணனின் பவள இதழ்களுக்கு அருகே தன்னுடைய செவியைக் கொண்டு போனார்.


"ஓம் நமோ நாராயணா' எனும் அஷ்டாக்ஷர நாமத்தை அவனது செவிகளில் ஓதினார் நாராயணன். திருமங்கை ஆழ்வாரின் செவியில் அமிழ்தம் பாய்ந்தாற்போல அந்தத் திருமந்திரம் நாராயணன் நாவிலிருந்து வெளிப்பட்டுப் பாய்ந்ததும் அவரது ஞானக்கண்கள் திறந்தன.


கைகளிலிருந்த வாளும் வில்லும் தானாக நழுவின.


""பெற்ற தாயினும் ஆறுதலினைச் செய்யும் நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்'' என்று வாயாரப் புகழ்ந்து போற்றினார் திருமங்கை ஆழ்வார். நெடுஞ்சாண்கிடையாக நிலம் கிடந்து சேவித்துத் தொழுது எழுந்தபோது அங்கே பல்லக்கு இல்லை. மணமக்கள் இல்லை. உற்றார் உறவினர் எவருமில்லை. பொன் மூட்டையுமில்லை. ஆனால் அந்த இடத்திலே ஒரு திவ்யப் பேரொளி ஆழ்வார் கண்களுக்கு மட்டும் தெரிந்தது!
thanks to http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=485
                                                                                             HISTORY
கள்ளர் குலத்தில், பிறந்தவர் , 12 ஆழ்வார்களில் ஒருவர் , முனையஅரையர்  பட்ட பெயர்
திருமங்கையாழ்வார் கள்ளர் மரபைச் சேர்ந்தவர்.


திருமங்கை மன்னரின்இயற்பெயர் நீலன். சோழ மன்னனின் சேனைத் தலைவர் ஆலிநாடன் என்பவர்க்கும் மனைவிவல்லித்திருவுக்கும் நள ஆண்டில் கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்தில் பௌர்ணமி திதியில் வியாழக்கிழமை அன்று திருமங்கை மன்னன்திருமங்கையாழ்வார் என அழைக்கப்பட்ட நீலன்பிறந்தார். நீலன் கல்வி கற்க்கும்போதே இலகணப்பிழையின்றி கருத்துச் செறிவுள்ள பாக்களை இயற்றும் ஆற்றலைப்பெற்றிருந்தார். ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளில் வல்லவராக விளங்கி நாற்கவி வல்லான் என்ற சிறப்பு பெயரையும் பெற்றார்.


வாள், வில், வேல், ஈட்டி ஆகியபடைக்கலப் பயிற்சியிலும் வல்லவனானார். தேர், யானை, குதிரை, காலால் ஆகிய நால்வகைப் படைகளையும் தலைமை யேற்று பகைவர்களை வென்று சோழ மன்னருக்குபெரும் வெற்றிகளை தேடித்தந்தார். சோழ மன்னர் அகமகிழ்ந்து நீலனை திருவாலிநாட்டிற்க்கு மன்னனாக்கி திருமங்கை என்னும் ஊரை தலைநகராக தந்தான்.


நீலன்குமுதவல்லியார் என்பவரை மணந்து தன் வாழக்கைப் பயணத்தை தொடங்கினார். தன் கையில்கிடைத்த செல்வத்தை எல்லாம் பாகவதர்கட்கு அமுது படைப்பதிலேயே செலவழித்தார். அரசனுக்கு சேரவேண்டிய வரிப்பணத்தையும் இதற்கே செலவழித்தமமையால் அரசு காவலில் சிறைவைக்கப்பட்டு பின்னர் காஞ்சிப் பேரருளான்வரதராசப்பெருமாள் திருவருளாள் பெரும் பொருள் பெற்று அரசுக்குரிய கப்பத்தை செலுத்தியும் சிறை மீண்டார்.திருவரங்கப் பெருமாள் நீலனின் வலது காதில் ஓம் நமோ நாராயணா என்னும் திருமந்திரத்தை உபதேசித்து அவரின்ஞானக்கண்ணைத் திறந்து திருவருள் காட்டினார்.இதன் பின் திருமங்கையாழ்வார் 108 திவ்விய தேசங்களில் 86 திவ்விய தேசங்களை மங்களாசாசனம் செய்தார்.


திருமங்கையாழ்வார்பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிரியதிருமடல், பெரியதிருமடல் என்கிற ஆறுபிரபந்தங்களையும் அருளிச்செய்துள்ளார்.திருமங்கையாழ்வார் தம் இறுதிக்காலத்தை தம் மணைவியுடன் திருக்குறுங்குடியில் கழித்தார்.
நன்றி http://kallarperavai.webs.com/apps/blog/entries/show/1999492-thirumangai-ஆல்ல்வர்


நன்றி:
மாய தேவர்
........