மறவர் போற்றும் வீரப்போர்

தமிழர் திருமகனாம் தொல்காப்யிர் வாழ்ந்த காலம் வீரயுகக்காலம். உலகோர் போற்றும் மறக்காலம். அந்த சங்ககால மக்கள் வாழ்க்கை முறை அம்மக்களின் நாட்டுணர்வு, அவர் தம் வீரச்சிறப்பு, வாணிகம், அக்காலப் புலவர்களின் ஆழ்ந்த புலமை, மகளிரின் வீரப்பண்பு போன்ற செய்திகளையும் தொல்காப்பியம் தௌ;ளத் தெளிவாக காட்டுகிறது.

படை பலம்

அன்று ஒரு நாட்டின் வீரத்தினை நிலை நிறுத்திக் காட்டியது, நால்வகைப் படைபலங்களே ஆகும்.
தனி ஒரு வீரரும் தம் வீரத்தை தயங்காது முன்னேறிக் காட்டினர். அவர்களின் போர்ப்படைகளிலே தேர்ப்படை, யானைப்டை, குதிரைப்படை, காலாட்படை என்ற நால்வகைப் படைகளும் இருந்தன என்பதை,

பிறமலைக் கள்ளர்--கொக்குளம்

பிறமலைக் கள்ளர் என்கிற சாதியினர் அதிகம் வாழும் பகுதி மதுரை மாவட்டம். எட்டு நாடுகளைக் கொண்டதாக சொல்லப்படும் இந்தப் பகுதியில், செக்கானூரணியை அடுத்த கொக்குளம் முக்கியமானது. இது ஒரு நாடு என்றழைக்கப்படுகிறது. இந்த மக்களின் பிரதான வழிபாட்டு மரியாதை, பேய்க்காமன் என்கிற நாட்டார் தெய்வத்திற்கு வழங்கப்படு கிறது. இத்தெய்வத்திற்கு பூசை புனஸ் காரங்களை நிகழ்த்துபவர் ஒரு பறையர். கள்ளர்கள் கோவிலாக இருந்தாலும், தீண்டத் தகாதவர்களுக்கும் வழிபாடு செய்ய உரிமை உண்டு.

அருள்மிகு ராமநாத சுவாமி

வரலாற்று சிறப்பு மிக்க இத்திருத்தலம்  பனிரெண்டாம் நூற்றாண்டு   வரை ஒரு துறவியின்  பராமரிப்பில் இருந்து வந்ததாகவும் ,அதன் பின் கி.பி பன்னிரெண்டாம் நூற்றாண்டில்   இலங்கை அரசர் பராக்கிராமபாகு என்பவர் இத்திருகோயில் மூலஸ்தானத்தை ( கர்ப்பக்கிரகம்   ) கட்டியும் , பதினைந்தாம் நூற்றாண்டில்  ராமநாதபுரம் அரசர் உடையான் சேதுபதி மற்றும் நாகூரை சேர்ந்த வைசியர் ஒருவரும் மேற்கு கோபுரத்தையும் , மதில்  சுவர்களையும் கட்டினார்கள் .


சேதுபதி செந்தமிழ்த் திரட்டு

 
 
ஆசிரியர்: எம்.முத்துச்சாமி
வெளியீடு: முருகாலயம்
பகுதி: இலக்கியம்
ISBN எண்:
விலை:  ரூ.150
  முருகாலயம், 29,பரோடா வீதி, சென்னை-33 (பக்கம்:328)

சேதுபதி செப்பேடுகள்


கி.பி 1606 இல் ஆட்சிபீடம் ஏறிய ராமநாதபுரம் சேதுபதி அரசர்களின் 107 செப்பேடுகள் இந்நூலில் உள்ளன. 35 செப்பேடுகள் இராமேஸ்வரம் கோயிலுக்கு உரியவை. ஏர்வாடி தர்க்கா, இராமநாதபுரம் ஈசா பள்ளிவாசல், இராமேஸ்வரம் ஆபில்காபில்.தர்க்கா போன்றவைகட்கு சேதுபதிகள் கொடைச் செப்பேடுகள் இந்நூலில் உள்ளன. மன்னர் சலாபம், முத்துக்குளித்தல் பற்றி பல செப்பேடுகள் உள்ளன. அக்கால நிர்வாகம், வரிமுறை, சமுதாய வரலாற்றுச் சான்றாக இத்தொகுப்பு உள்ளது. ஒரு செப்பேடு மக்கள் நீதிமன்றம் பற்றி விபரிக்கின்றது.


...

மாவீரன் பூலித்தேவன்-2

முதன் முதலில் விடுதலைக்கு குரல் கொடுத்தவர் வீரபாண்டிய கட்டபொம்மனோ அல்ல! ஜான்சிராணி லக்குமிபாயோ அல்ல!!
சிப்பாய் கலகமும் அல்ல!!! தென்னகத்து பூலித்தேவன் தான். ஏனோ வராலாறுகள் தமிழர்களை மூடிட்டு வைத்து மறைக்கின்றன.இவரை மட்டும் அல்ல முக்குலத்தோரையே அப்படித்தான் செய்கிறது.

மாவீரன் பூலித்தேவன் ஒரு மாபெரும் புரட்சித் தலைவன். தென்பாண்டி நாட்டில், திருநெல்வேலிச் சீமையில் தோன்றி தன்னிகரற்றுத் தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழ் மறவன்! நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்ட செங்கோலொச்சிய பாளையக்காரனாவான். தன்பாளையத்திற்கு மட்டுமின்று மேற்குப் பாளையத்தார்களுக்கெல்லாம் தலைமையேற்று மாற்றாரை நடு நடுங்கச்செய்த மாபெரும் போர்வீரன்.

மருது பாண்டியர்களின் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சி

மருதிருவர் பெற்ற சாபம்
சித்தபுருஷர் நாராயண யோகீஸ்வரர் சிவகங்கை அருகே உள்ள ஒர் சிற்றூர் காளையார்கோவில். பாண்டி நாட்டு சிவத்தலங்களுள் ஒன்று. மேலும் 18ம் நூற்றாண்டு ஆங்கிலேய எதிர்ப்புப் புரட்சிகளுக்கு மையமாக அமைந்த ஊர். சிவன் கோவிலில் 3 சிவலிங்கங்கள் உண்டு. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இவ்வூர் திருக்கானப்பேர் என அறியப்ப்டும் சிறப்பைத் தன்னகத்தே கொண்டிருந்தது. இவ்வூரில் 2000 ஆண்டு காலமாக சித்த நிலை அடைந்த ஒரு யோக புருஷர் ஜீவ சமாதியில் இருந்து வந்தார். அவர் பெயர் நாராயண யோகீஸ்வர் என்பர். 1801ம் ஆண்டு ஜூலை வாக்கில் சிவன் கோயில் அர்ச்சகர்கள் ஒரு புதிரான சம்பவத்தைக் கண்டனர். நள்ளீரவு அர்த்த ஜாம பூஜை முடிந்து கதவுகள் மூடப்படும். வெளியிலிருந்து ஒருவரும் கோவிலிக்குள் செல்ல இயலாது. மறு நாள் காலையில் கதவுகள் திறந்ததும் சுவர்ண காளீஸ்வரர் கருவறைக்குள் மாமிசத் துண்டுகள் மற்றும் எலும்புத் துண்டுகள் இறைந்து கிடக்கும். பல நாட்கள் இவ்வாறு நடக்கவே அர்ச்சகர்கள் ஆச்சர்யம், அதிர்ச்சி அடைந்து இதனை ஆட்சி அதிகாரத்திலுள்ள மருது இருவரிடம் தெரிவித்து ஆகம விதிகளுக்குப் புறம்பான கருவறைக்குள் மாமிச பண்டங்கள் சிதறுதலைத் தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

மூக்கறுப்புப் போர் -2

மனித ஜாதியில் ஆணோ, பெண்ணோ முக அழகு மூக்காலேதான். அழகி கிளியோபாட்ராவின் மூக்கழகு சரித்திர பிரசித்தி. அவளுடைய மூக்கழகுக்கு முதலில் மயங்கியவன் சீசர். அடுத்து அந்தோனி. யோசித்துப் பார்த்தால் மூக்கறுத்த கதைதான் இராமாயணம். ஆண்களில் கும்பகர்ணன் மூக்கிழந்தான். பெண்களில் சூர்ப்பனகை . இவர்கள் நிசமாகவே மூக்கிழந்தவர்கள். சீதையைத் தூக்கிக்கொண்டுபோக வந்தாள் சூர்ப்பனகை. பெண் கொலை கூடாது என்பதால் இவளைக் தண்டித்து விரட்ட நினைத்தான் இலக்குவன். பெண்ணுக்கு அழகு தரும் உறுப்புக்களை அறுத்தெரிந்தான். முதலில் அறுபட்டது இவளுடைய மூக்கு.

சேதுபதி மண்டபத்தின் பின்னணி ?

General India news in detail
மைசூர் மன்னர் மதுரை மீது சில நூற்றாண்டுகளுக்கு முன் படையெடுத்தார். தல்லாகுளம் பகுதியில் போர் நடந்தது.  இதில் மைசூர் மன்னரின் படைவீரர்கள் பலர் பலியாகி தோற்றனர். எஞ்சிய மைசூர் நாட்டு சிப்பாய்களின் மூக்குகள் அறுக்கப்பட்டன. இதனால் அது மூக்கறுப்பு போர் என்றழைக்கப்பட்டது. இதன் வெற்றியை கொண்டாடும் வகையில் தற்போதுள்ள தமுக்கம் அருகே மண்டபம் ஒன்று கட்டப்பட்டது.


வரலாற்றுப் பெருமிதம் கொண்ட திருமயம் கோட்டை


புதுக்கோட்டை மாவட்டத்தில் பன்னூறு ஆண்டுகால வரலாற்றுச் சின்னமாகத் திகழ்கிறது, திருமயம் கோட்டை.  ராமநாதபுரம் சேதுபதி மன்னர் கிழவன் சேதுபதியின் காலத்தில் 1676-ல் இக்கோட்டை கட்டப்பட்டது.

இலக்கியங்களும் கட்டடக்கலை நூல்களும் வரையறுத்த இலக்கணத்துடன் அமைந்தது இக்கோட்டை. கோட்டையைச் சுற்றி முன்னர் ஏழு சுற்று மதில்கள் இருந்தன. கோட்டை வட்டவடிவில் அமைந்துள்ளது.

சிவகங்கைச் சீமையின் வீரமங்கையர்

rani-velu-nachiyarஎழுதியவர்: கீதா ரவீந்திரன்
சிவகங்கை நகரம் தனது பெயரை இழந்து உசேன் நகர் என்ற பெயர் தாங்கி, பெருமை இழந்து கிடந்தது.  இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சிவகங்கை ராணி வேலுநாச்சியாரின் வீரப்படை எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு போர்முரசு கொட்டிப் புறப்பட்டது.  சுதந்திர தாகம் கொண்ட அந்தப் படையின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் கோச்சடை மல்லாரிராயன், திருப்புவனம் ரங்கராயன், மானாமதுரை பிரைட்டன், பூரியான், மார்டினஸ் ஆகியோர் மண்டியிட்டனர்.

சேதுபதியின் வீரம்

மேற்கே மலைப்பகுதிகளில் இடையறாது அடைமழை பெய்ததால் நீர்ப்பெருக்கு அதிகமாகி சிக்க தேவராயன் காவிரியின் குறுக்கே எடுத்திருந்த அணை தானே நலிந்து நகர்ந்து போய்விட்டது. அப்போதிருந்த பயங்கரமான வெள்ளப் பெருக்கில் சிக்க தேவராயன் மறுபடி காவிரியை வழிமறித்து நிறுத்தலாம் என்று நினைக்கக்கூட முடியவில்லை. காவிரி மீண்டும் தன் இஷ்டப்படி ஓடினாள்.

     திரிசிரபுரம் தஞ்சைப் பகுதிகளில் காவிரியில் வெள்ளம் இருகரையும் நிமிர ஓடியது. வறட்சி தவிர்ந்தது. உழவர்களின் துயரம் ஒழிந்தது. இதனால் மைசூரின் மேல் படை எடுப்பது என்ற திட்டம் கைவிடப்பட்டது. ஆனாலும் காவிரி நீர்ப் பிரச்சினை காரணமாகத் திரிசிரபுரத்துக்கும், தஞ்சைக்கும் ஏற்பட்ட ஒற்றுமை மட்டும் தொடர்ந்து நீடித்தது. அந்த நட்பு வேறொரு படையெடுப்புக்குப் பயன்பட்டது. வேறொரு படையெடுப்புக்கு அவசியமும் ஏற்பட்டது.